Connect with us

Uncategorized

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் குறித்து ஆலோசனை!

Published

on

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் 2020ம் ஆண்டு முதல் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி கூறுகையில் ‘10 மற்றும் 12 ஆம் வகுப்புதேர்வில், கேள்வி கேட்கும் விதத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 1 முதல் 5 மதிப்பெண்கள் கொண்ட சிறு கேள்விகள் கேட்கப்படும். மாணவா்களின் புரிதல் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் கேள்விகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் சிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி கூறுகையில் ‘தொழிற்கல்வி பாடங்களில் படிக்கும் மாணவர்கள் குறைவு என்பதால் அதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதமே நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது.மேலும் தொழிற்கல்வி அல்லாத பாடங்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. .

வொகேஷனல் எனப்படும் தொழில்சார் கல்வி பயிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 15-ம் தேதிக்குள்ளும் தேர்வுகளை நடத்தி முடிப்பது குறித்து சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து தேர்வுத் தாள் திருத்துவதையும், முடிவுகளை அறிவிப்பதையும் முன்கூட்டியே வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2020-ம் ஆண்டு முதல் அமலாக வாய்ப்புள்ளது.

 

Uncategorized

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/09/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

15-09-2020 

செவ்வாய்கிழமை

மேஷம்

இன்று மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்

இன்று குடும்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விருத்திக்குண்டான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்

இன்று தடைகள் தகரும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து காரியங்களை கடை பிடித்து சாதித்து கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யம் வெளிப்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்

இன்று உங்களை பார்த்தவுடன் அனைவரையும் முக வசீகரத்தால் கவர்ந்திழுப்பீர்கள். உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் விருப்பங்களும் தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளை கேட்டு முடிவெடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக் காட்டி திருத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று சுதந்திரமாக பணியாற்றி வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

இன்று அயல்நாடு சம்பந்தபட்ட செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்றுக் கொள்ள முயற்சிகள் எடுப்பீர்கள். இறை வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

இன்று குறுக்கு வழியில் சென்று எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படுங்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு

இன்று அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்கவும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப்  பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்

இன்று உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமாகவே அமையும் – வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் போதும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

இன்று ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் கடன் பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டியது வரும். குடும்பத்தில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். உங்களுடைய புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Continue Reading

Uncategorized

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு

Published

on

நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம்  ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.
எஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பாக  தண்டனையில்  இருந்து  தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது  மனுக்களையும் நிராகரித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு  பேரும்  தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும்  தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .
தனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும்  தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின்  தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.
Continue Reading

Uncategorized

தேனியில் பெண் சிசுக்கொலை

Published

on

தேனியில் பெண் சிசுக்கொலை

தேனி  மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த  தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த  4 மாதங்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.ஒரு மாதத்துக்கு  முன் வயிற்று வலியால் அந்த குழந்தை இறந்தது என்று கூறப்பட்டது.குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதெனக் கிராம மக்கள் சைல்ட் லைன் அமைப்பினர்க்கும் ,கிராம நிர்வாக அலுவலர்க்கும் புகார் அளித்தனர்.
விசாரணையில்  தாயும் ,பாட்டியும் சேர்ந்தே குழந்தையைக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது .
21ம் நூற்றாண்டிலும் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனைக்குரிய விஷயம் .

 

 

Continue Reading




வேலை வாய்ப்பு34 mins ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 hour ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை2 hours ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்3 hours ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு3 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி3 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்14 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

கேலரி22 hours ago

அக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்!

பர்சனல் ஃபினாஸ்23 hours ago

எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: