படுகொலை
ஐதராபாத்தில் உள்ள சரூர்நகர் தாசில்தார் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்ததாக கூறப்படும் ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணல்
இரும்பு கம்பியால் அவரது தலையை உடைத்தனர் என்று அவர் கூறினார். அவர்களுக்கு உதவுவதற்காக யாரும் வரவில்லை என்றும் குற்றம் நடந்த 30 நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் வந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு தனித்தனி பைக்குகளில் வந்தனர் என கூறினார்.

அதிகாரிகள்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும், சுல்தானாவின் குடும்பத்தை சேர்ந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

திருமணம்
சுல்தானாவின் திருமணத்திற்கு முன்பு அவரது சகோதரர் சுல்தானாவை கொல்ல முயன்றுள்ளார். அவர் ஹைதராபாத் தப்பி சென்று ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்துள்ளார். அவர்களது குடும்பம் தொடர்பு கொள்ளாமல் இருக்க சிம் கார்டை மாற்றியுள்ளனர்.

எச்சரிக்கை
சுல்தானா, நாகராஜு திருமணம் செய்து கொண்டால் சுல்தானாவின் சகோதரர் கொன்றுவிடுவதாக அவரது அம்மா எச்சரிக்கை செய்துள்ளார். நாகராஜு நடுரோட்டில் கொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு உதவ யாரும் செல்லவில்லை என்றார் சுல்தானா.