Connect with us

தொழில்நுட்பம்

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ துவக்க விற்பனை மற்றும் சலுகைகள்.!

Published

on

சியோமி நிறுவனம் முதல் முறையாகத் தனது புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது.

நேற்று நடைபெற்ற சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுக விழாவில், ரெட்மி நோட் 6 ப்ரோ வின் விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி துவக்க வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.13,999 என்ற விலையிலும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துவக்க விற்பனையான இன்று பல அதிரடி சலுகைகளை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. பிளாக் ஃப்ரைடே விற்பனையை முன்னிட்டு அனைத்து சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.1000 சலுகையை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ துவக்க வேரியண்ட் வெறும் ரூ.12,999க்கும் மற்றொரு வேரியண்ட் ரூ.14,999க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையாக ரூ.500 உடனடி சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,400 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

 

 

Advertisement

தொழில்நுட்பம்

உஷார்.. ஜியோ பெயரில் போலி ஆஃபர் எஸ்எஸ்எஸ், வாட்ஸ்ஆப் பகிர்வுகள்!

Published

on

நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு ஷாக் செய்தி காத்திருக்கிறது. ஆம், உங்கள் போனை சைபர் மோசடியாளர்கள் தாக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம்.

உடனே பயப்பட வேண்டாம். இப்படி உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால், தயவு செய்து அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் போனில் உள்ள தரவுகளைத் திருட விரும்புபவர்கள் இது போன்ற போலி சலுகைகளுக்கான அறிவிப்புகளைப் பரப்புவார்கள்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த, ஜியோ நிறுவனத்தின் பத்திரிக்கை தொடர்பாளர், “நாங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு, இது போன்ற போலி எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று தகவல் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த எஸ்எம்எஸ் இந்திய மொபைல் எண்களில் இருந்து வருகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், சலுகையைப் பெறச் செயலி ஒன்று பதிவிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. அதன் மூலமாகவே பல சைபர் குற்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

Continue Reading

தொழில்நுட்பம்

சியோமி பயனர்களின் தகவல்களை திருடுகிறதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Published

on

சியோமி சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், எந்த கோப்புகளைத் திறக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்ற தகவல்கள் திருடப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வெளியிட்டு தகவல்கள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சியோமி உலவி மூலம் இணையதள சேவையைப் பயன்படுத்தும் போது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள், போனின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவரங்களையும் சியோமி திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் கபி சிர்லிக் கூறியுள்ளார். தான் பயன்படுத்தும் ரெட்மி நோட் 8-ல் செய்யும் அனைத்து செயல்களையும் சியோமி திருடியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் இதழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சியோமி நிறுவனம் இந்த தகவல்களைச் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவிடம் பகிர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

உலாவிகளில் தனிப்பட்ட தகவல்களைத் திருடக் கூடாது என்பதற்காக incognito மோட் இருக்கும். இந்த முறையில் இணையதளங்களைப் பார்த்தாலும் சியோமி நிறுவனம் தகல்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சியோமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இணையதள நிறுவனங்கள் பயனர்களின் தரவுகளைச் சேமிப்பது பொதுவான ஒன்று தான், அது பயனர்களின் அனுமதியுடனே நடைபெறுகிறது. அதேநேரம் அந்த தரவுகளை யாரிடமும் பகிர்வதில்லை என்று கூறியுள்ளது.

சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் கூறிய போது, சியோமி நிறுவனம் அவர்களுக்கு உள்ள ரிமோட் சர்வர்களுக்கு தரவுகளை அனுப்புகிறது. இது தான் பயன்படுத்தும் சியோமி மாடல் போன் மட்டுமல்லாமல் பிற போன்களிலும் கண்டிப்பாக நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தொழில்நுட்பம்

ZOOM-க்கு போட்டியாக ஜியோ மீட்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கியுள்ளனர். எனவே நிறுவனத்தின் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த விடியோ கான்ஃபரன்ஸ் ஆப்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஜியோ மீட் (JioMeet) என்ற வீடியோ கான்ஃபரன்சிங் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ மீட் செயலியானது ZOOM Cloud Meeting, மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கூகுள் ஹாங் அவுட்ஸ் போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிற விடியோ கான்ஃபரன்ஸ் சேவைகள் போன்று ஜியோ மீட் செயலி ஆண்டிராய்டு, ஐஓஎஸ் சாதனங்களில் கிடைக்கும். மேலும் ஜியோ மீட் இணையதளம் மூலமாகவும் வீடியோ கான்ஃபரன்ஸ் சேவையைப் பெற முடியும். ஆனால், விண்டோஸ் கணினிகளுக்கான செயலி குறித்த விவரங்கள் இல்லை.

ஜியோமீட் வீடியோ கான்ஃபரன்ஸ் சேவையைத் தொடங்குவதை உறுதி செய்துள்ள ஜியோ, JioMeet.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இன்னும் பணிகள் முழுமை அடையாததால் ஜியோ மீட் சேவைக்கு விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விரைவில், ரிலையன்ஸ் ஜியோ மீட் சேவை மூலமாகவும் வருவாய் ஈட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்19 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்19 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)

இந்தியா2 days ago

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

இந்தியா2 days ago

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்3 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/05/2020)

வணிகம்3 days ago

டிவிஎஸ்-ல் சம்பளம் கட்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா3 days ago

வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 weeks ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: