Connect with us

தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்!

Published

on

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை மால்வேர் மூலம் தாக்கி, போனின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க முடியும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்யும் செக்மார்க்ஸ் இதை கூகுள் நிறுவனத்திற்கு ஜூலை மாதமே தெரிவித்துள்ளார். அதுவும் இந்த பாதுகாப்பு பிழைகள் கூகுளின் பிக்சல் 2 எக்ஸ்எல், கூகுள் பிக்சல் 3 போன்களிலேயே உள்ளது.

கூகுளின் இந்த போன் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்ட் மொபைல் விற்கும் சாம்சங், சியோமி மற்றும் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த பாதுகாப்பு பிழையை கூகுள் முக்கியமாக கருதவில்லை. இது குறித்து கூகுள் வெளியிட்ட தகவலில் செக்மார்க்ஸ்க்கு நன்றியும், இந்த பாதுகாப்பை நிவர்த்தி செய்த மென்பொருள் பேச்-ஐயும் அனைத்து ஆண்டராய்ட் சாதன தயார்ப்பாளர்களுக்கும் வளங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்

இந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்!

Published

on

பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் 19 சதவீதம் வரை பங்கு வகிப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடியும் முன்பு, அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு எளிமையான பண பரிவர்த்தனை சேவையே யூபிஐ திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யூபிஐ சேவையைப் பயன்படுத்தித் தான் கூகுள் பே செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

Continue Reading

தொழில்நுட்பம்

Gmail-ஐ தாக்கும் விஷமிகள்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை!

Published

on

உலகின் பெரும்பாலான தனிநபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. இந்நிலையில் அதன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gmail பயனர்களுக்கு விஷமிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை தகவலைக் கூகுள் அனுப்பியுள்ளது.

மர்ம விஷமிகள், கூகுள் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாகவும், அதில் கடவுச்சொல்(Gmail Password) உள்ளிட வேண்டும் என்று கேட்கப்படும். அப்போது உன்மை என்ன என்று தெரியாமல் கடவுச்சொல்லை அளித்தால், உங்கள் Gmail தகவல்கள் திருடு போகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த விஷமிகள் எச்சரிக்கை மின்னஞ்சல் 500 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த மின்னஞ்சல் பெற்றவர்களுக்கு கூகுள் உயர் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதில் இணைபவர்களின் Gmail கணக்குகள் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே உங்கள் Gmail-க்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி தவிர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.

பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பெற, தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்க மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது(blocking an email address) மற்றும் மின்னஞ்சல்கள் குழுவிலகுவது (Unsubscribe from mass emails) என்று இரண்டு சேவைகள் உள்ளன.

மின்னஞ்சல் முகவர்களை பிளாக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட முகவரியிலிருந்து எந்த மின்னஞ்சலும் உங்களுக்கு வராமல் தடுக்க முடியும். அடுத்து நாம் சில இணையதளங்களில் பதிவு செய்யும் போது அவர்களது குழு மின்னஞ்சலில் நமது மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்து இருக்கும். அவர்கள் நமது மின்னஞ்சல் விவரங்களைக் காசுக்காக விற்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இப்படி உங்களுக்குத் தேவையில்லாத சேவைகளிலிருந்து வரும் குழு மின்னஞ்சல்களிலிருந்து விலக வேண்டும்.

இவற்றைச் செய்த பிறகும், உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்ந்து விஷமிகளின் தாக்குதலுக்கு உள்ளானால் அது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்,

எப்படி மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கை திறக்கவும்.
படி 2: உங்களுக்கு வந்த தேவையில்லா மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: உங்கள் மின்னஞ்சல் கணக்கின் வலது புறத்துக்கு மேலே உள்ள, மேலும் என்ற பொத்தனை கிளிக் செய்து, Block என்பதை தேர்வு செய்யவும். ஒருவேலை தவறாக பிளாக் செய்துவிட்டால் அவர்களை தேவைப்பட்டால் unblock-ம் செய்துகொள்ளலாம்.

குழுவிலகுவது எப்படி?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கைத் திறக்கவும்.
படி 2: குலுவிலகுவதற்கான மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: பின்னர் அந்த மின்னஞ்சலில் உள்ள Unsubscribe அல்லது Change preferences என்பதை கிளிக் செய்து குழுவிலிருந்து விலகிவிடலாம்.

Continue Reading

தொழில்நுட்பம்

இ-லர்னிங்கிள் முதலீட்டை குவிக்கும் யூடியூப்!

Published

on

வேகமாக வளர்ந்து வரும் இணைய உலகில், ஆன்லைனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இதை நன்கு புரிந்துகொண்ட, 26.5 கோடி இந்திய பயனர்களுடைய யூடியூப் நிறுவனம், யூடியூப் மூலமாக இ-லர்னிங் போன்ற வீடியோக்களை அளித்து வரும் சேனல்களுக்கு நிதி அளிக்க முடிவு செய்துள்ளது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை யூடியூப் நடத்திய “EduCon” என்ற மாநாட்டில், “ ExamFear Education Hindi, Learn Engineering, Don’t Memorise, Study IQ Education, D’art of Science, Learnex-English Lessons Through Hindi, GetSetFlySCIENCE மற்றும் Let’s Make Engineering Simple” உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு நிதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி, மேலே பட்டியலிட்டுள்ள யூடியூப் சேனல்கள் சிறந்த கற்றல் உள்ளடக்கங்களை அளிப்பார்கள்.

முதற்கட்டமாகத் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆங்கில பயிற்சி, சுற்றுச்சூழல் அறிவியல், அரசியல் அறிவியல், கால்குலஸ், மரபியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் தரமான வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன.

Continue Reading
வீடியோ செய்திகள்4 hours ago

6 கிரக சேர்க்கை – தலைவர்கள் கவனமா இருக்கணும் – Shelvi தரும் அதிர்ச்சி தகவல்

வீடியோ செய்திகள்4 hours ago

‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?

வீடியோ செய்திகள்4 hours ago

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து

வீடியோ செய்திகள்4 hours ago

மஜாஜ் செய்வதற்காக தொழிலதிபரை அழைத்து மிரட்டி 5 லட்ச ரூபாய் பறித்த பெண்

வீடியோ செய்திகள்5 hours ago

Dhoni இல்லாம Match பாக்கவே மொக்கையா இருக்கு – சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16-12-2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/12/2019)

தொழில்நுட்பம்16 hours ago

இந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்!

weekly prediction, வாரபலன்
வார பலன்1 day ago

இந்த வார ராசிபலன் (டிசம்பர் 15 முதல் 21 வரை)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15-12-2019)

வேலை வாய்ப்பு1 month ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா4 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்4 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்4 hours ago

6 கிரக சேர்க்கை – தலைவர்கள் கவனமா இருக்கணும் – Shelvi தரும் அதிர்ச்சி தகவல்

வீடியோ செய்திகள்4 hours ago

‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா?’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?

வீடியோ செய்திகள்4 hours ago

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து

வீடியோ செய்திகள்4 hours ago

மஜாஜ் செய்வதற்காக தொழிலதிபரை அழைத்து மிரட்டி 5 லட்ச ரூபாய் பறித்த பெண்

வீடியோ செய்திகள்5 hours ago

Dhoni இல்லாம Match பாக்கவே மொக்கையா இருக்கு – சோகத்தில் ரசிகர்கள்

வீடியோ செய்திகள்2 days ago

குழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..!

வீடியோ3 days ago

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரெய்லர்!

வீடியோ3 days ago

ஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’திரைப்பட டிரெய்லர்!

வீடியோ செய்திகள்3 days ago

சீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்

வீடியோ செய்திகள்4 days ago

சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி திருடன் – மடக்கிப் பிடித்த ஆட்டோ டிரைவர்

Trending