தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 விற்பனையில் திடீர் திருப்பம்!


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்களின் விற்பனையை திடீரென நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்தன. தற்போது கேலக்ஸி எஸ்20, எஸ்20 பிளஸ், எஸ்20 அல்ட்ரா போன்ற மாடல்கள் இந்தியாவில் விற்று தீர்ந்து விட்டது என சாம்சங் இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிட்டுள்ளன.
மேலும் பழைய கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்க நினைத்த வாடிக்கையாளர்களையும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் யூனிட்களை விற்பனை செய்யக்கூடும்.
தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடல் மட்டுமே அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாடல் அறிமுகமாகி சில மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் வழங்கும் இரண்டு புது அப்டேட்ஸ்… விரைவில் அறிமுகம்!


வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புது வித அப்டேட்களை அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி தங்களது ஃபேஸ்புக் கணக்கை லாக்-அவுட் செய்வது போலவே வாட்ஸ்அப் கணக்கையும் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இத்தகையை வசதியைத் தான் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விரைவில் புழக்கத்துக்குக் கொண்டு வர உள்ளது ஃபேஸ்புக். இனி வரும் காலங்களில் பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை நீக்க ஏதுவாக இருக்காது.
வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு பதிலாக அதிலிருந்து பயனாளர்கள் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இதேபோல், விரைவில் ஒரே கணக்கை நான்கு சாதனங்களில் இணைத்துக் கொள்வதற்கு ஏதுவான வசதியையும் பயனாளர்களுக்கு வழங்குகிறது வாட்ஸ்அப். தொலைபேசியின் மூலமாக மட்டும் இல்லாமல் தொலைபேசி இல்லாத போது வேறு சாதனங்களின் வழியாகவும் வாட்ஸ்அப் செயலியை பயனாளர்களால் பயன்படுத்த முடியும்.
இந்த புது ஆப்ஷன் பயனாளர்களுக்குக் கூடுதல் ப்ரைவசியைத் தரும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
ஏலத்துக்கு வந்த ‘ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் வேலை விண்ணப்பக் கடிதம்..!


ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோயின் பாதிப்பின் காரணமாக காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 1973-ம் ஆண்டு தனக்கு வேலை வேண்டி கைப்பட எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் தற்போது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் காப்ஸ் எழுதிய வேறொரு கடிதம் ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தார். தற்போது ஏலத்துக்கு வந்துள்ள கடிதம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த ஏலம் பிபரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு வந்துள்ள கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் தனக்கு கனிணி, கால்குலேட்டர் உபயோகப்படுத்தத் தெரியும் என்றும் டிசைன் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம்
ட்விட்டரில் இருந்தே இனி வாய்ஸ் மேஸேஜ் அனுப்பலாம் – வருகிறது அசத்தல் அப்டேட்!


ட்விட்டர் நிறுவனம், தங்களின் பயனர்களுக்கு ஒரு புதிய அட்டகாசமான அப்டேட்டை ரோல் அவுட் செய்ய உள்ளது. அதன்படி கூடிய விரைவில் ட்விட்டரில் வாயஸ் மெஸேஜ்களை, டைரக்ட் மெஸேஜ் மூலம் இன்னொருவருக்கு அனுப்ப முடியும்.
தற்போது ட்விட்டர் தளத்தில் வாய்ஸ் மெஸேஜ்களை ட்வீட்களாக அனுப்ப முடியும். அதே நேரத்தில் அதை நேரடி மெஸேஜாக ஒருவருக்கு அனுப்ப முடியாது. இந்நிலையில் இந்த வசதியைத் தங்களது பயனர்களுக்கு கொடுக்க சோதனைகளை நடத்தி வருகின்றது ட்விட்டர் நிறுவனம்.
தற்போதைக்கு இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த வசதியை குறுகிய வட்டத்துக்கு ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு சோதனைகளை நடத்தி வருகிறதாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இந்த வசதியை ஒரு சேர வெளியிட ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
தற்போதைக்கு சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு உள்ள இந்த வசதியானது சீக்கிரமே மொத்த நாட்டுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்களாக பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தங்களது பயனர்களுக்குத் தொடர்ந்து அதிக வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது ட்விட்டர்.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்2 days ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!