தொழில்நுட்பம்
வெறும் ரூ.7,000-ல் அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி போன் – பிப்ரவரி 2-ம் தேதி வெளியீடு!


பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான சாம்சங், தனது பிரபலமான கேலக்ஸி வரிசையின் அடுத்த போனை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த புதிய போனுக்கு சாம்சங் நிறுவனம், ‘கேலக்ஸி M02’ எனப் பெயரிட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த வரிசையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘கேலக்ஸி M01’ போனை சாம்சங் வெளியிட்டிருந்தது. அந்த போன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் தரமான ஸ்மார்ட் போனாக இருந்தது. தற்போது அந்த போனின் அடுத்த வெர்ஷன் குறித்தான தகவல் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கேலக்ஸி M02 போன், 7000 ரூபாய்க்கு சந்தைகளில் கிடைக்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்.டி+ டிஸ்பிளே, 5,000 எம்.ஏ.எச் பேட்டரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி, 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரிவில், ஷாவ்மி நிறுவனத்துக்கு அதிக மவுசு இருக்கிறது. அதைத் தகர்க்கும் வேளையில் சாம்சங் நிறுவனம் இறங்கியுள்ளது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் வழங்கும் இரண்டு புது அப்டேட்ஸ்… விரைவில் அறிமுகம்!


வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புது வித அப்டேட்களை அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி தங்களது ஃபேஸ்புக் கணக்கை லாக்-அவுட் செய்வது போலவே வாட்ஸ்அப் கணக்கையும் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இத்தகையை வசதியைத் தான் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விரைவில் புழக்கத்துக்குக் கொண்டு வர உள்ளது ஃபேஸ்புக். இனி வரும் காலங்களில் பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை நீக்க ஏதுவாக இருக்காது.
வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு பதிலாக அதிலிருந்து பயனாளர்கள் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இதேபோல், விரைவில் ஒரே கணக்கை நான்கு சாதனங்களில் இணைத்துக் கொள்வதற்கு ஏதுவான வசதியையும் பயனாளர்களுக்கு வழங்குகிறது வாட்ஸ்அப். தொலைபேசியின் மூலமாக மட்டும் இல்லாமல் தொலைபேசி இல்லாத போது வேறு சாதனங்களின் வழியாகவும் வாட்ஸ்அப் செயலியை பயனாளர்களால் பயன்படுத்த முடியும்.
இந்த புது ஆப்ஷன் பயனாளர்களுக்குக் கூடுதல் ப்ரைவசியைத் தரும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
ஏலத்துக்கு வந்த ‘ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் வேலை விண்ணப்பக் கடிதம்..!


ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோயின் பாதிப்பின் காரணமாக காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 1973-ம் ஆண்டு தனக்கு வேலை வேண்டி கைப்பட எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் தற்போது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் காப்ஸ் எழுதிய வேறொரு கடிதம் ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தார். தற்போது ஏலத்துக்கு வந்துள்ள கடிதம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த ஏலம் பிபரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு வந்துள்ள கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் தனக்கு கனிணி, கால்குலேட்டர் உபயோகப்படுத்தத் தெரியும் என்றும் டிசைன் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம்
ட்விட்டரில் இருந்தே இனி வாய்ஸ் மேஸேஜ் அனுப்பலாம் – வருகிறது அசத்தல் அப்டேட்!


ட்விட்டர் நிறுவனம், தங்களின் பயனர்களுக்கு ஒரு புதிய அட்டகாசமான அப்டேட்டை ரோல் அவுட் செய்ய உள்ளது. அதன்படி கூடிய விரைவில் ட்விட்டரில் வாயஸ் மெஸேஜ்களை, டைரக்ட் மெஸேஜ் மூலம் இன்னொருவருக்கு அனுப்ப முடியும்.
தற்போது ட்விட்டர் தளத்தில் வாய்ஸ் மெஸேஜ்களை ட்வீட்களாக அனுப்ப முடியும். அதே நேரத்தில் அதை நேரடி மெஸேஜாக ஒருவருக்கு அனுப்ப முடியாது. இந்நிலையில் இந்த வசதியைத் தங்களது பயனர்களுக்கு கொடுக்க சோதனைகளை நடத்தி வருகின்றது ட்விட்டர் நிறுவனம்.
தற்போதைக்கு இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த வசதியை குறுகிய வட்டத்துக்கு ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு சோதனைகளை நடத்தி வருகிறதாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இந்த வசதியை ஒரு சேர வெளியிட ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
தற்போதைக்கு சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு உள்ள இந்த வசதியானது சீக்கிரமே மொத்த நாட்டுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்களாக பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தங்களது பயனர்களுக்குத் தொடர்ந்து அதிக வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது ட்விட்டர்.