Connect with us

தொழில்நுட்பம்

புதிய பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டம் – எல்லாமே அன்லிமிடெட்.!

Published

on

டெலிகாம் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியை சமாளிப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வரிசையில் அண்மையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரூ.78 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது பயனர்களுக்கென்று பல புதிய திட்டங்களை பல புதிய சலுகையுடன் வழங்கிவருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை 10 நாட்கள் வேலிடிட்டியுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 2 ஜிபி 3ஜி மற்றும் 2ஜி டேட்டா சேவையை 10 நாட்களுக்கென மொத்தம் 20 ஜிபி டேட்டா சேவையை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைக்கப்படும். அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை பயனர்கள் ஆக்டிவேட் செய்ய ‘STV COMBO78’ என்று மெசேஜ் டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு அனுப்பி, உடனடியாக அன்லிமிடெட் வீடியோ காலிங் சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.

தொழில்நுட்பம்

இ-லர்னிங்கிள் முதலீட்டை குவிக்கும் யூடியூப்!

Published

on

வேகமாக வளர்ந்து வரும் இணைய உலகில், ஆன்லைனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இதை நன்கு புரிந்துகொண்ட, 26.5 கோடி இந்திய பயனர்களுடைய யூடியூப் நிறுவனம், யூடியூப் மூலமாக இ-லர்னிங் போன்ற வீடியோக்களை அளித்து வரும் சேனல்களுக்கு நிதி அளிக்க முடிவு செய்துள்ளது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை யூடியூப் நடத்திய “EduCon” என்ற மாநாட்டில், “ ExamFear Education Hindi, Learn Engineering, Don’t Memorise, Study IQ Education, D’art of Science, Learnex-English Lessons Through Hindi, GetSetFlySCIENCE மற்றும் Let’s Make Engineering Simple” உள்ளிட்ட யூடியூப் சேனல்களுக்கு நிதி அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் அளிக்கும் நிதியைப் பயன்படுத்தி, மேலே பட்டியலிட்டுள்ள யூடியூப் சேனல்கள் சிறந்த கற்றல் உள்ளடக்கங்களை அளிப்பார்கள்.

முதற்கட்டமாகத் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆங்கில பயிற்சி, சுற்றுச்சூழல் அறிவியல், அரசியல் அறிவியல், கால்குலஸ், மரபியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் தரமான வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன.

Continue Reading

இந்தியா

கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு: ரத்தான சந்திரயான் 2!

Published

on

சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்பட இருந்தது. இதுவரையில் நிலவின் தென்துருவ மண்டலத்தில் எந்த நாடுமே தடம் பதிக்கவில்லை. இதனால் இதில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருக்கும். எனவே இதுவரையில் இஸ்ரோ எடுத்துக்கொண்ட பணிகளிலேயே சந்திரயான் 2 தான் மிகக் கடினமானது என்று கூறப்பட்டது.

இதனையடுத்து அனைத்து பணிகளும் நிறைவடைந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2-வை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 2 மணியளவில் இஸ்ரோ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், விண்கலனை ஏவுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சந்திரயான் 2 விண்கலனை ஏவுதல் இன்று கைவிடப்படுகிறது. எப்போது விண்கலன் ஏவப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

விண்கலத்துக்கு எரிபொருளை நிரப்பியபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே முதலில் ராக்கெட்டிலிருந்து எரிபொருள் அனைத்தையும் வெளியேற்றி பின்னர் ராக்கெட் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Continue Reading

உலகம்

நீங்க ஃபேஸ்புக் யூஸ் பன்றீங்களா? அய்யயோ தப்பு பன்னிட்டீங்களே!

Published

on

இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு பெரிய சர்ச்சை எழுந்தது.

இதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தனியுரிமை கொள்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது ஃபேஸ்புக்கிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக். இவர் தனது ஃபேஸ்புக் கணக்கையும் டெலிட் செய்துவிட்டு அனைவரையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார்.

இந்நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த சர்ச்சையை மீண்டும் கையிலெடுத்துள்ளார் இவர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் வோஸ்னியாக், உங்களது உரையாடல்கள் தனிப்பட்ட முறையில்தான் நடக்கிறது என நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால், அதை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதையெல்லாம் தடுக்க எந்த வழியும் இல்லை.

லேசரை பயன்படுத்தி உங்களது இதயத் துடிப்புகளை அளவிடுகின்றனர். பல கருவிகளைப் பயன்படுத்தி உங்களை ஒட்டுக்கேட்கின்றனர். எனது செல்போன் மூலம் என்னை ஒட்டுக்கேட்கிறதா, இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? இதில் அலெக்ஸா நிறுவனம் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியது. ஃபேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறுவது தான் இதற்கு தீர்வு. சிலர் ஃபேஸ்புக்கின் பயன்களுக்காகத் தனியுரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். ஆனால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேற ஒரு வழியைக் கண்டறியுங்கள் என்றார்.

Continue Reading




பர்சனல் ஃபினாஸ்2 hours ago

இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (16/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

சினிமா12 hours ago

திரைக்குமுன் இணையத்தில் போட்டி போடும் தமிழ்த் திரைப்படங்கள்…

தமிழ்நாடு19 hours ago

பால் விலையைத் தொடர்ந்து பால் பொருட்கள் விலையையும் உயர்த்திய ஆவின்.. மக்கள் அதிர்ச்சி!

weekly prediction, வாரபலன்
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 15 முதல் 21 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (15/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/09/2019)

செய்திகள்2 days ago

நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… வெளியானது அரசாணை!

சினிமா2 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 weeks ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா2 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 month ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 weeks ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா1 month ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

வீடியோ2 weeks ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ1 month ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ3 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ3 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ3 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ3 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

வீடியோ3 months ago

வழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்!

Trending