தொழில்நுட்பம்
வாட்ஸ்ஆப்-ல் புதிய மோசடி.. பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது என்ன?


உலகம் முழுவதும் போன் பயன்படுத்தாத மக்களே இல்லை என்ற நிலை உருவாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனில் அதிகளவில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலில் OTP மூலமாக புதிய மோசடி சம்பவம் ஒன்று நடந்தேறி வருகிறது.
இந்த மோசடியில், உங்கள் நண்பர் போல ஒருவர் மேசேஜ் செய்வதும், பின்னர் தனது மொபைல் எண்ணிற்கு வர வேண்டிய ஒருமுறை கடவுச்சொல் தவறாக உங்களது மொபைல் எண்ணிற்கு வருவதாகக் கூறுவது, அந்த ஒருமுறை கடவுச்சொல்லை அளித்த உடன் அவர்களது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் திருடப்படும் மோசடி சம்பவம் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பொதுவாக ஒருவரின் மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லைப் பிறருக்குப் பகிரக் கூடாது. ஆனால் புதிதாக இப்படி ஒரு மோசடி நடந்துவருகிறது. எனவே ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பயனர்களைக் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்ஆப் செயலியை பாதுகாப்பாகப் பயன்படுத்த, இந்த இரட்டை பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துங்கள் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறுகின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் இரட்டை பாதுகாப்பு முறையை ஆக்டிவேட் செய்வது எப்படி?
படி 1: வாட்ஸ்ஆப் செயலியில் செட்டிங்ஸ்-ஐ திறக்கவும்.
படி 2: Account > Two-step verification > Enable செய்யவும்.
படி 3: Enable செய்ய உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தேவைப்பட்டால் மொபைல் எண்ணை உள்ளிடலாம். இல்லை என்றால் அதை தவிர்க்கலாம். ஆனால் மின்னஞ்சல் முகவரியைப் பாதுகாப்பிற்கு நல்லது.
படி 4: Next என்பதை அழுத்தவும்.
படி 5: மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்த பிறகு, சேவ் அல்லது டன் என்பதை அழுத்தவும்.
இதுபோன்ற மோசடிகள் வாட்ஸ்ஆப் தகவல்கள் திருட மட்டுமல்ல, வங்கி கணக்கில் உள்ள பணம் என பல்வேறு மோசடிகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே முடிந்தவரை இந்த ஒருமுறை கடவுச்சொல்லை எந்த காரணத்துக்காகவும், யாருடனும் பகிராமல் இருப்பது நல்லது.
தொழில்நுட்பம்
‘எங்கள விட்டு போயிறாதீங்க..’ வாட்ஸ்அப் நிறுவனம் கதறல்


வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கியது. அந்த பிரைவசி கொள்கைகள் அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் விதமாக இருந்ததாக புகார்கள் வந்தன.
இதனால் வாட்ஸ்அப்புக்கு மாற்றான செயலியை வாடிக்கையாளர்கள் தேடத்தொடங்கினர். இதனிடையே சிக்னல் செயலியைப் பயன்படுத்துமாறு எலான் மஸ்க் தெரிவித்தால், பெரும்பாலானோர் சிக்னல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் சிக்னல் ஆப் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் பிரைவசி குறித்து தவறான, குழப்பான தகவல்கள் பரபரப்பப்படுவதாகவும், அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் நாங்கள் உங்கள் உதவுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பிரைவசி கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட கால அவகாசத்தை மே 15 வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட செயலிகள் நீக்கம்.. காரணம் என்ன தெரியுமா?


கடன் வழங்கும் செயலிககளை கூகுள் நிறுவனம் தனது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது கொள்கைக்கு முரணாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படும் செயல்களை அவ்வபோது களை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பயனர்களுக்கு கடன் வழங்கி, மிரட்டி லாபம் பெறும் சிறுசிறு செயலிகளை நீக்கியுள்ளது.
இந்த செயலிகள் குறிப்பிட்ட அளவு வரையிலான தொகையை மிகஎளிதாக வழங்கி விடும். கடன் வழங்கப்படும் போதே பயனர்களின் மொபைல் எண்,கேமரா, எஸ்எம்எஸ் என அனைத்தையும் அணுகுவதற்கான அனுமதியையும் பயனர்களிடத்தில் கேட்கும். அதை பெரிதுபடுத்தாத பயனர்களோ செயலி கேட்கும் அணுகல் அனைத்திற்கும் அனுமதி வழங்கி விடுவர்.
இதனையடுத்து கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பல மிரட்டல்களையும், பயனர்களின் விவரங்களை வைத்து பொதுவெளியில் தரக்குறைவாக விளம்பரமும் செய்யும். இதனால் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் வெளிநாடுகளில் நடந்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் அதுபோல கிட்டத்தட்ட நூறு செயலிகள் இருப்பதாக தெரியவந்தது. இது கூகுளின் கவனத்திற்குச் செல்ல கடன் வழங்கும் குறிப்பிட்ட செயலிகளை அப்படியே நீக்கி விட்டது.
தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.444 ரீசார்ஜ் திட்டம் பற்றி தெரியுமா?


புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 444 ரூபாய்க்கு ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டு வருகிறது.
ரூ.444-க்கு ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு, தினமும் 2 ஜிபி தரவு, என மொத்தமாக 112 ஜிபி தரவு 4ஜி தரவு கிடைக்கும். இந்த இணையதள தரவு முடிந்த உடன் இணைய வேகம் 64kbps ஆக குறையும்.
மேலும் வரம்பற்ற இன்கம்மிங், அவுட்கோயிங் அழைப்புகள், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கும்.
ரூ.444 ரீசார்ஜ் திட்டங்கள் மட்டுமல்லாமல், ரூ.599, ரூ.2,399, ரூ.249க்கு தினமும் 2 ஜிபி தரவுடன் ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோவில் உள்ளன.
ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி தரவு, 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் கிடைக்கும். ரூ.2,599-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.