உலகம்
எச்-4 தடை சட்டத்திற்கு அனுமதியை மறுத்த நீதிமன்றம்? அமெரிக்க இந்திய தம்பதிகள் மகிழ்ச்சி!

எச்-1பி விசா கீழ் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை பணியுடன் அழைத்துச் செல்ல உதவும் முறை எச்-4 வேலைவாய்ப்பு அங்கிகார ஆவணம் (H4 EAD) ஆகும்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருக்கும் காலத்தில் இந்த எச்-4 முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த எச்-4 முறையின் கீழ் இந்தியர்கள் பெறும் அளவில் பயன்பெற்று வந்தனர்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில் எச்-4 முறையைத் தடை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
அதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கணவன் ஒரு நாட்டிலும், மனைவி ஒரு நாட்டிலும் எப்படி வாழ்வது என்று முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகளை அமெரிக்க அரசின் எச்-4 சிறப்பு அனுமதி முறை தடை சட்டத்தைச் செல்லாது என்று அறிவித்துள்ளது.
இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பெறும் மகிழ்ச்சியை அடைந்துள்ளார்கள்.
உலகம்
இறைச்சி சாப்பிட்டவருக்கு உடலில் காத்திருந்த அதிர்ச்சி; ஷாக் ஆன மருத்துவர்கள்!

சீனாவில் உணவு கலப்படம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு மேகி உள்ளிட்ட உணவுகளில் அதிகப்படியாக எம்எஸ்ஜி இருக்கும் என்று தடை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எம்எஸ்ஜி தினம்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாக உள்ளது.
அதே போன்று சில வருடங்களுக்கு முன்பு, 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட மாட்டு இறைச்சிகள் சந்தைகளில் விற்பனையானதாகவும் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது சீனாவில் உள்ள 43 வயதான ஸீ ஸோங் என்பவர் ஒரு மாதமாகத் தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். சாதாரண தலைவலி என நினைத்த அவர் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார்.
அது ஒரு கட்டத்தில் தீவிரம் அடைந்து மருத்துவரை நாடியுள்ளார். மருத்துவர்களுக்கும் சோதனைக்கான மாதிரிகளை எடுத்துக்கொண்டு மத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.
ஸீ ஸோங் உடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்கள் இருந்துள்ளன. இது நீண்ட காலம் சமைக்கப்படாத இறைச்சியில் உள்ள ஒன்று. அதனை நாம் சரியாகச் சமைக்கவில்லை என்றால் நாடாப்புழுக்கள் உடல் முழுவதும் பரவி, உடல் உறுப்புகளைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை கூறி தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.
உலகம்
அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி!

இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் தரப்பு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ராவல்பிண்டியில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத், இந்தியா, பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது அதைத் தொடர்ந்து வரும் மாதத்தில் போர் வெடிக்கும்.
இந்தியாவுடன் நடக்கும் அந்தப் போர் இறுதியானதாக இருக்கும். இந்தப் பிரச்னையை உண்மையாகவே தீர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் ஐநா வாக்கெடுப்பு மூலம் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியாவுடன் இன்னும் சமரசம் பேச வாய்ப்பில்லை. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்தாலும் பல முஸ்லீம் நாடுகள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தன. சீனா போன்ற நண்பர்களை நாங்கள் பெற்று இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அவர்கள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள் என்றார்.
உலகம்
உடலுறவுக்கு அழைத்தபோது ஆண் நண்பர் தூங்கியதால் வீட்டை கொளுத்திய பெண்!

அமெரிக்காவில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். அவர் அந்த நபரை உடலுறவுக்கு அழைத்த போது ஆண் நண்பர் வராமல் தூங்கியதால் வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
நியூ ஜெர்ஸியை சேர்ந்த தைஜா ரஸ்ஸெல் அந்த பகுதியை சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் தகாத உறவு வரை நீடித்துள்ளது. இவர்கள் அவ்வப்போது ஒன்றாக இருந்து உடலுறவு வைத்துக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் ஒன்றாக தங்கியுள்ளார். அப்போது இரவு தூங்கிகொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்க நள்ளிரவில் உடலுறவு கொள்ள ஆசை வந்துள்ளது.
இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த தனது ஆண் நண்பரை எழுப்பி உடலுறவு கொள்ள அழைத்துள்ளார். ஆனால் நல்ல தூக்கத்தில் இருந்த அந்த நண்பர் உடலுறவுக்கு மறுத்து மீண்டும் தூங்க சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வந்து மண்ணென்னையை எடுத்து வீட்டின் கூரையின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதனையடுத்து வீடு பற்றி எரிய அந்த ஆண் நண்பர் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு போலீசார் வந்து தீயை அணைத்து இது குறித்து விசாரித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததும், சம்பவத்தின் போது அவர் உடலுறவுக்கு அழைத்து இவர் மறுத்ததால் வீட்டை கொளுத்தியதும் தெரியவந்தது.
-
வீடியோ செய்திகள்2 days ago
” மஹாலட்சுமி புருஷனும் Jayashree- யும் சேர்ந்து Plan பண்றாங்க “- Isvar பரபரப்பு பேட்டி
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (04/12/2019)
-
தினபலன்1 day ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (06/12/2019)
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (05/12/2019)