உலகம்
இந்தியா வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!


இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக இருக்கும் இந்தியா வெகுவிரைவில் பிரேசிலை முந்தி இரண்டாம் இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து கொரனோ வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பதும் இன்று 12 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யும் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரனோ அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு பின்னர் நிலைமையை பொறுத்து இந்த் தடை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து நியூஸிலாந்து செல்லும் பயணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம்
நஷ்ட ஈடு கொடுக்காத எவர்க்ரீன் கப்பலை பறிமுதல் செய்த எகிப்து: பெரும் பரபரப்பு


சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிய நிலையில் அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது. இந்த ஒரு வாரத்தில் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள் காத்திருந்ததால் எகிப்தின் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த இழப்பை சரிகட்டும் வகையில் ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் எவர்க்ரீன் கப்பல் உரிமையாளர் இழப்பீடு தர முடியாது என்று கூறியதை அடுத்து சுயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இழப்பீடு வழங்கும் வரை எவர்கிரீன் கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகம்
கொரோனா பரவல் எதிரொலி: வகுப்பறையாக மாறிய கடற்கரை


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்துமே முடங்கி உள்ளது என்பதும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இதே ரீதியில் சென்றால் மாணவர்களின் படிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் ஸ்பெயின் நாட்டில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அறைக்குள் முடங்கி கிடந்து பாடங்கள் நடத்தினால்தான் கொரோனா வைரஸ் ஒருவருக்கொருவர் பரவும் என்றும் இதே வெட்டவெளியில் தூய்மையான காற்று உள்ள இடத்தில் வகுப்பறையை மாற்றினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
உலகம்
கொரோனாவை கண்டுபிடிக்க புதிய செயலி: 3 நிமிடத்தில் அறியலாம்!


கொரோனா தொற்று ஒருவருக்கு பரவி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தற்போது பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரும் நிலையில் கண்களை ஸ்கேன் செய்து செயலி ஒன்றின் மூலம் மூன்றே நிமிடத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என கண்டுபிடிக்கலாம் என ஜெர்மனி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இந்த முறையின்படி கண்களை ஸ்கேன் செய்து அந்தப் புகைப்படத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ள Semic EyeScan என்ற செயலிக்கு அனுப்பினால் கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அழற்சியின் அறிகுறி மூலம் கொரோனாவை உறுதி செய்யலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்த செயலியை கண்டுபிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண அழைப்பித இணையத்தில் வைரல்!