Connect with us

உலகம்

சீனாவில் செய்துள்ள முதலீடுகளைத் தாய் நாட்டுக்குத் திரும்பப் பணம் கொடுக்கும் ஜப்பான் அரசு!

Published

on

சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது குறையும் என்று ஜப்பான் நம்புகிறது.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஷார்ப், ஐரிஸ் ஓயாமா உள்ளிட்ட 57 நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு 57.4 மில்லியன் யென் வரை ஜப்பான் அரசு மானியம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க ஜப்பான் அரசு 70 பில்லியன் யென் வரை செலவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதே போன்ற முடிவை ஜப்பான் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய அரசு சீனாவின் 59 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.

ஜப்பானின் இந்த திடீர் முடிவுக்கு கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகள் மற்றும் தீவுகளில் சீனா செய்து வரும் முறையற்ற உரிமை கோரல்களே காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் சீனாவின் எல்லை உரிமை கோரல்களைத் தடுக்கும் விதமாக அமெரிக்கா தங்களது கப்பல்களை ஆசியத் தீவுகளில் நிறுத்த தொடங்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் உற்பத்தித் துறையில் சீனாவுக்கு உள்ள ஆதிக்கம் பெரும் அளவில் சரியும். ஜாப்பான் – சீனா இடையில் உள்ள வர்த்தக உறவு பெரும் அளவில் பாதிப்படையும்.

உலகம்

குறையாத கொரோனா இறப்புகள். அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்!

Published

on

அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1974 நபர்கள் இறந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.

தொடர்ந்து இத்தாலியில் 36,176 நபர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 653 நபர்கள் இறந்துள்ளனர். பிரேசிலில் 644 நபர்களும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

இந்தியாவில் 46,182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரே நாளில் 584 நபர்கள் இறந்துள்ளனர்.

உலகளவில் இதுவரை 5,71,06,666 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதுவரை 13,64,754 நபர்கள் இறந்துள்ளனர். 3,96,94,917 நபர்கள் மீண்டு வந்துள்ளனர். 1,61,46,995 நபர்கள் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர் என்று உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading

உலகம்

பிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் குற்றம்!

Published

on

பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் குற்றம் என்று இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பு குறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை டிஐஜி அஜித் ரோஹனா, ‘கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினசரி சம்பளத்தின் அடிப்படையில் சிலர் பிச்சை எடுக்கின்றனர். நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பதால் அதிக நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில், பிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் அது தண்டனைக்கு உரியக் குற்றம். பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Continue Reading

உலகம்

தேர்தல் தோல்வி எதிரொலி.. ட்ரம்ப்பை விவாகரத்து செய்யும் காதல் மனைவி மெலானியா?

Published

on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றதை அடுத்து, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்க்கிடெக்ட் படித்த மெலானியா, 1992-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் 2வது இடத்தை பிடித்த பிறகு உலகும் முழுவதும் பிரபலமானார். தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார் மெலானியா என்று கூறப்பட்டாலும், மாடலிங் துறையில் தவிர்க்க முடியாத மாடலிங் பெண்ணாக வளர்ந்து இருந்தார்.

ஒருமுறை பாரிஸ், கிகேட் கிளப்பில் ட்ரம்ப் உடன் நடந்த சந்திப்பு இவரது வாழ்க்கையை மாற்றியது. 2005-ம் ஆண்டு ட்ரம்ப்பை திருமணம் செய்துகொண்டார். தன்னை விட 24 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொண்டது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. ட்ரம்ப்புக்கு இவர் மூன்றாவது மனைவி. 2006-ம் ஆண்டு இவர்களுக்குப் பெயரன் என்ற மகனும் பிறந்தார்.

நீண்ட காலமாகவே அதிபர் ட்ரம்ப் மெலானியா இடையில் மன கசப்பு இருந்து வந்துள்ளது. அதிபராக இருக்கும் போது தான் ட்ரம்ப்பை விவாகரத்து செய்தால் தன்னை தண்டிக்க நேரிடும் என்று அச்சத்திலிருந்தார் மெலானியா.

இப்போது அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்துள்ளதால், வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியேறிய பிறகு மெலானியா ட்ரம்ப் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்14 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/11/2020)

வேலை வாய்ப்பு15 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/11/2020)

தமிழ்நாடு16 hours ago

பொறியியல் மாணவர்களைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய தமிழக அரசு!

சினிமா செய்திகள்18 hours ago

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் தவசி காலமானார்; திரை உலகினர் அதிர்ச்சி!

தமிழ்நாடு19 hours ago

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ‘நிவர்’ புயல் எச்சரிக்கை!

சினிமா19 hours ago

மாநாடு படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? விளக்கம் அளித்த சுரேஷ் காமாட்சி!

ஆரோக்கியம்21 hours ago

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்குத் தீர்வு!

வேலை வாய்ப்பு22 hours ago

கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு23 hours ago

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 week ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ1 week ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ2 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: