Connect with us

உலகம்

கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி – ஐக்கிய அரபு அமீரகம்!

Published

on

தீவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உருகுலைந்து கிடக்கும் கேரளாவை மீண்டும் கட்டமைக்க இந்த நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் சிக்கி கேரளா வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தில் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. மாநில அரசு சார்பில் சுமார் 20 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி அவசர கால நிதியாக 500 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கேரளாவிற்கு ரூ.700 கோடி அளவிற்கு நிதியாகவும், பொருளாகவும் உதவி செய்வதாக அந்நாட்டு அதிபா் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யான் அறிவித்திருப்பதாக கேரளா முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த மக்கள் பலருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் வீடாக உள்ளது. கணக்கெடுப்பின் படி அங்கு 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டின் 30% மக்கள் தொகை இந்தியர்களுடையது. ஐக்கிய அரபு அமீரகம் முதல் நாடாக கேரளாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. “ ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் பங்காற்றியுள்ளனர். பங்காற்றியும் வருகின்றனர்” என்றும் கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் அந்நாட்டு துணை அதிபர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இது வரை இந்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி 680 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரிடரை, அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி உதவி கிடைக்கும்.

இப்போது கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மீட்புப் பணிகளை நிறுத்திக் கொண்டு, மறு சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதாக, கேரள வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 95% மக்கள் மீட்கப்பட்டுவிட்டனர். மீதம் இருப்பவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

 

 

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

அதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்!

Published

on

செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 1 முதல் 15 வரையில், இந்தியாவில் அதிகபட்சமாக 13,08,991 நபர்களை கொரோனா பாதித்துள்ளது. தொடர்ந்து அடுத்த இடங்களில் அமெரிக்கா (5,57,657), பிரேசில் (4,83,299), அர்ஜெண்டினா (1,54,298), ஸ்பெயின் (1,30,872) ஆகிய நாடுகள் உள்ளன.

அதேபோல செப்டம்பர் 1 முதல் 15 தேதி வரையில் இந்தியாவில் (16,307) தான் கொரோனா பாதிப்புகளால் அதிகளவில் இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (11,461), பிரேசில் (11,178), மெக்சிகோ (6,891), கொலம்பியா (3,759) ஆகிய நாடுகள் உள்ளன.

 

Continue Reading

உலகம்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்!

Published

on

ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினரில் ZScaler நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜே சவுதிரி, சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் ரோமேஷ் வாத்வானி, வேஃபேர் தலைமை நிர்வாக திகாரி நீரஜ் ஷா, கோஷாலா வெஞ்சர்ஸ் விநோத் கோஷாலா, ஷெர்பாலோஸ் கவிதரக் ராம் ஸ்ரீராம், விமான நிறுவனர் ராகேஷ் கங்வால் மற்றும் வொர்க்டே தலைமை நிர்வாக அதிகாரி அனீல் பூஸ்ர் ஆகியோ ஃபோர்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Continue Reading




வேலை வாய்ப்பு9 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை9 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு10 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை11 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்12 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு13 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்13 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

பர்சனல் ஃபினாஸ்14 hours ago

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

கிரிக்கெட்17 hours ago

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: