உலகம்
‘வணக்கம்’ சொல்லி தழிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன இங்கிலாந்து பிரதமர்!


தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை நாள் பொங்கல். தமிழர்களின் புத்தாண்டாகவும், உழவர்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுவது பொங்கல். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் இன்று இயற்கைக்கு நன்றி தெரிவித்து, புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.
பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழர்கள் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வது வழக்கம்தான். ஆனால், இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன், தமிழில் வணக்கம் என்று சொல்லி, தனது பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது பலரைக் கவர்ந்துள்ளது.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d
— Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
அவர், ‘வணக்கம். பிரிட்டனில் இருக்கும் தமிழ்ச் சமூகத்தினருக்குத் தைத் திருநாள் வாழ்த்துகள். இயற்கைக்கு நீங்கள் நன்றி செலுத்தும் இன்னாளில், கோவிட் தொற்றுக்கு எதிராக உங்களின் செயல்பாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருந்தொற்று காலத்தில் உங்களின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் சமூக ஊக்கம் நன்றாக தெரிந்தது.
கொரோனா போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் தமிழ் மருத்துவர்கள், தொழில் மூலம் மீண்டும் பொருளாதாரத்தை நீங்கள் மீட்க உதவியது மற்றும் உங்களின் பல்வேறு தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த நேரத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாட முடியாத சூழல் இருக்கிறது. இருப்பினும் அதிலிருந்து நாம் மீண்டு வருவோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பானைகளில் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கட்டும்’ என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.
உலகம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை உயர்வு!


கடந்த வெள்ளியன்று இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவுப்பகுதியில் கடந்த வெள்ளியன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடு, கட்டிடங்களை விட்டு வெளியேற முயன்றனர். ஆனால், அதற்குள்ளாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர்.
இதில் முதற்கட்டமாக 43 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் கட்டிடங்களுக்குள் பலர் சிக்கியிருந்ததால் அவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன.
இந்த நிலையில், தற்போது நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 28 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
உலகம்
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 பேர் பலி – வெளியான அதிர்ச்சித் தகவல்


உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் நேற்று முதல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசித் திட்டத்தின்படி ஒருவருக்கு, இரண்டு டோஸ்கள் மூலம் ஊசி போடப்படும். முதல் டோஸ் போடப்பட்ட 28 நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் ஊசி போடப்படும்.
இந்த இரண்டில் கோவாக்ஸின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், அந்த தடுப்பு மருந்து இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை முடிக்கவில்லை என்பதால்தான்.
இந்நிலையில் நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 பேர் இறந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. அங்கு பிஃபைசர் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ ஆகிய நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து மட்டுமே தற்போதைக்கு அவசரத் தேவைக்குப் பயன்படுத்த நார்வே அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுவரை நார்வேயில் 42,000 பேருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 29 பேர் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் இறந்துள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி இறந்தவர்களில் அனைவரும் வயது மூத்தவர்களாகவே இருந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு அதிக ஆரோக்கிய குறைபாடுகள் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, மயக்கம் வருவது, வாந்தி வருவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் ஏற்பட்டு, பல்வேறு அலர்ஜிகளும் வந்துள்ளன. அவர்களுக்கு இருந்த ஆரோக்கிய குறைபாடு மேலும் மோசமடைந்து இறந்துள்ளனர்’ என்று நார்வே சுகாதாரத் துறை தகவல் கூறுகிறது.
நார்வே நாட்டில் மட்டும் தான் இதுவரை இப்படியான அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 19 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் 21 பேருக்கு மட்டும் தான் மிக அதிக அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல்.
ஆஸ்திரேலிய அரசு, நார்வேயில் பயன்படுத்தப்பட்ட பிஃபைசர் தடுப்பூசியின் 1 கோடி டோஸ்கள் தங்களுக்கு வேண்டும் என்று ஆர்டர் செய்திருந்தது. தற்போது அதனால் இறப்புகள் ஏற்படுவதாக தகவல் வந்த நிலையில், அந்நாட்டு அரசும் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த அச்சம் தெரிவித்து வருகிறது. இந்தியாவிலும் கோவாக்ஸின் மருந்தை பயன்படுத்த, இதே காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உலகம்
ஐஸ் கிரீம் மூலமாக பரவும் கொரோனா! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!


சீனாவில் ஐஸ் கிரீம் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் சீன மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது வரை தீர்ந்தபாடில்லை. புதிய வகை கொரோனாவாக உருமாறி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனா உருவான விதத்தை கண்டறிந்து, உறுதிசெய்வதற்காக சீனாவுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சீனாவில் ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கள்ள டியன்ஜின் பகுதியில் உள்ள பிரபல ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஐஸ் கிரீம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்கள், பால் பொருட்கள் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது தெரியவில்லை. இருப்பினும் டியன்ஜின் பகுதி ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஐஸ் கிரீமில் கொரோனா தொற்று இருப்பதால் சீன மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஐஸ் கிரீம் சாப்பிடுவதை நிறுத்தி வருகின்றனர்.