உலகம்
கொரோனா 2.0 இன்னும் கொடூரமானதாக இருக்கும்- உலக சுகாதார நிறுவனம்


கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளார்கள். 90 மில்லியனும்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கொரோனா 2.0 பாதிப்பு அதிகப்படியாக வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தற்போது சர்வதேச அளவில் பண்டிகை காலம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து உள்ளதால்தான் அடுத்த கட்டம் கடினமானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளிலும் மக்கள் விடுமுறைக் காலத்தால் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், அடுத்து ஐரோப்பா நாடுகளில் இருந்தே கொரோனா தொற்று அதிகப்படியாக பரவும் என எச்சரிக்கப்படுகிறது.
உலகம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. மருத்துவமனை, கட்டிடங்கள் இடிந்ததில் 35 பேர் பலி!


இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகினர்.
இந்தோனிசியாவில் உள்ள கலவேசி தீவில் இன்று அதிகாலை திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அனைவரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஒரு சில கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன.
சுமார் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிங்களும் இடிந்து விழுந்தன. முதலில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இடுபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மருத்துவமனை கட்டிடங்கள் இடிந்ததால், அதில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள், மருத்துவ பணியாளர்களும் பலத்த காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் அங்குள்ள கவர்னரின் அலுவலகமும் லேசாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
உலகம்
கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனா செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா!


கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளிவந்த வெளவ்வாலின் இறகு சாம்பலானது, அருகில் இருந்த இறைச்சிக்கடை இறைச்சிகளின் மேல் விழுந்ததாகவும், இதனால் கொரோனா பரவியதாகவும் பல மாதங்களாக சீன அரசு காரண கதை கட்டி வந்தது.
இதனிடையே சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா எப்படி பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும்படி பல நாடுகள், உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தன. உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு, நேரடியாக சீனா சென்று கொரோனா பரவிய காரணத்தை கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதன்படி, அந்த அமைப்பைச் சேர்ந்த 15 மருத்துவ விஞ்ஞானிகள் ஜனவரி 1 ஆம் தேதி சீனா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக சிங்கப்பூரில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் சீனா செல்ல ஆயுத்தமாகினர். ஆனால் ஒரிரு நாளில் 15 பேரில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 2 பேர் மட்டும் சீனா செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்ற 13 மருத்துவ விஞ்ஞானிகள் சீனா இறங்கியதும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், 14 நாட்கள் வரையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சீன அரசு கெடுபிடி விடுத்துள்ளது.
உலகம்
சீனாவின் முக்கிய மாகாணத்தில் திடீர் அவசரநிலை பிரகடனம்!


சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 12 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது.
இதனால் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில், ஹைலோங்ஜியாங் மாகாணம் முழுவதும் திடீரென அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீர் அவசர நிலை பிரகடனத்தால் சுமார் 3.5 கோடி மக்கள் வீட்டிற்குள்ளையே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில், ஏற்கனவே தலைநகர் பீஜிங்கில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கொரோனாவுக்கான இரண்டாவது தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர். கொரோனா வீரியம் குறைந்திருந்தாலும், புதிய வகை கொரோனாவால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது.
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)