உலகம்
14 வயது சிறுவனுடன் 50 வயது ஆசிரியை தகாத உறவு: வீடு, கார், ஹோட்டலில் உல்லாசம்!


50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினோயிஸ் பகுதியை சேர்ந்த டைய்னா சிடெஸ்டெர் என்ற 50 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வசித்த வீட்டின் அருகில் வசித்த 14 வயது சிறுவன் ஒருவனுடன் பழகியுள்ளார். இந்த தொடர்பில் இருவரும் ஒருவருக்கொருவர் நிர்வாண புகைப்படங்கை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து பாலியல் உறவு வைத்துக்கொண்ட இருவரும் பலமுறை ஆசிரியையின் வீடு, கார், உள்ளூர் ஹோட்டல் அறைகள் என பல இடங்களில் உடலுறவு கொண்டுள்ளனர். இவர்களின் இந்த தகாத உறவை கண்டுபிடித்த மர்ம நபர் ஒருவர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலிசார் டய்னாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குற்றவியல் பாலியல் துஷ்பிரயோகம், சிறார் ஆபாச படங்களை பகிர்ந்து கொண்ட குற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ஆசிரியை டய்னா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உலகம்
கொரோனா பீதி: இந்தியாவிலிருந்து ‘கைலாசா’-வுக்கு வரத் தடை போட்ட நித்தி!


இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கொரோனாவில் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘கைலாசா’ நாட்டின் அதிபர் சாமியார் நித்தியானந்தா, தங்கள் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து யாரும் வரக் கூடாது என தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மலேசியா நாட்டில் இருந்தும் யாரும் கைலாசாவுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாம் அலையைக் கணக்கில் கொண்டு இந்த புதிய உத்தரவு அமலுக்கு வருவதாக நித்தியானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
KAILASA’s #PresidentialMandate
Executive order directly from the #SPH for all the embassies of #KAILASA across the globe. #COVID19 #COVIDSecondWaveInIndia #CoronaSecondWave #Nithyananda #Kailaasa #ExecutiveOrder pic.twitter.com/I2D0ZvffnO— KAILASA’S SPH JGM HDH Nithyananda Paramashivam (@SriNithyananda) April 20, 2021
ஈக்வெடார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நித்தியானந்தா தலைமறைவாக இருந்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் இந்தியாவில் தேடப்படும் நபராக இருக்கும் நித்தியானந்தாவை, சர்வதேச போலீஸாராலும் தேடப்பட்டு வருகிறார்.
ஆனால் அவரோ தொடர்ந்து ‘கைலாசா’ நாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு அதிரவிட்டு வருகிறார்.
உலகம்
இந்தியா சென்றால் கொரோனா பரவும்: அமெரிக்க அரசு எச்சரிக்கை!


இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்பதும் இதனை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா இந்தியா செல்ல வேண்டாம் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பல அமெரிக்கர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம்
ஆப்பிள் பழம் ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்த ஆச்சர்யம்..!


ஆப்பிள் பழம் ஆர்டர் செய்த நபருக்கு ஆப்பிள் ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ள ஆச்சர்யம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் 50 வயதான நிக் ஜேம்ஸ். இவர் டெஸ்கோ என்னும் சந்தையின் கீழ் சாப்பிடுவதற்கான ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் டெலிவரி வாங்கிய போது நிக் ஜேம்ஸ்-க்கு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம், ஆப்பிள் பழங்களுக்குப் பதிலாக அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்திருந்தது.
டெஸ்கோ என்னும் நிறுவனம் விளம்பரத்துக்காக குறிப்பிட்ட நபர்களுக்குப் பரிசாக எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்துள்ளது. இதன் காரணமாகவே நிக் ஜேம்ஸ்-க்கு அதிர்ஷ்டம் அடித்து அவருக்கு ஆப்பிள் ஐபோன் எஸ்இ கிடைத்துள்ளது. ஈஸ்டர் சமயத்தில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இது என நிக் ஜேம்ஸ் ஐபோன் கிடைத்தது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
A big thanks this week to @Tesco & @tescomobile. On Wednesday evening we went to pick up our click and collect order and had a little surprise in there – an Apple iPhone SE. Apparently we ordered apples and randomly got an apple iphone! Made my sons week! 😁 #tesco #substitute pic.twitter.com/Mo8rZoAUwD
— Nick James (@TreedomTW1) April 10, 2021
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்2 days ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!
-
கிரிக்கெட்2 days ago
220 ரன்கள் அடித்தும் டென்ஷனான மேட்ச்: சிஎஸ்கே த்ரில் வெற்றி!