வைரல் செய்திகள்
‘எருமசாணி’ ஹரிஜா-வுக்கு வளைகாப்பு… வைரல் புகைப்படங்கள்..!


எருமசாணி யூட்யூப் தளத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் மூலம் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் நடிகர் அதர்வா உடன் 100 என்ற படத்திலும் ஹரிஜா நடித்திருந்தார். பின்னர் தனது கல்லூரி கால நண்பர் அமர் உடன் திருமணம் செய்து கொண்டவர் திருவிளையாடல் என்னும் யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். யூட்யூப், மாடலிங், சினிமா எனத் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் ஹரிஜா-அமர் தம்பதியினர் விரைவில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்று ஹரிஜாவுக்கு வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஹரிஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
வைரல் செய்திகள்
‘தல’ அஜித்- ஷாலினி லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோ… வைரல்!


தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இணைந்து எடுத்துள்ள சமீபத்திய ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தல அஜித் தற்போது வலிமை படத்துக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் இன்று சென்னையில் வீதிகளில் மக்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒருபுறம் வைரல் ஆகிக் கொண்டிருக்க மற்றொரு புறம் மனைவி ஷாலினி உடன் சமீபத்தில் எடுத்துக் கொண்டுள்ள ரொமான்டிக் புகைப்படமும் இன்று ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தைத் தற்போது சமுக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் வேகமகா ஷேர் செய்தி வருகின்றனர். 2000-ம் ஆண்டு நடிகர் அஜித் உடன் காதல் திருமணத்தில் இணைந்த ஷாலினி அதன் பின்னர் சினிமா துறையைவிட்டு முழுவதுமாக விலகி விட்டார். அதன் பின்னர் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் சிறிது காலம் கவனம் செலுத்திய ஷாலினி தற்போது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி தமிழ் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். அதுவும் தனது ஆஸ்தான இயக்குநர் ஆன மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஷாலினி. இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தில் தான் முக்கியமான வரலாற்றுக் கதாபாத்திரமாக நடிக்க உள்ளார் ஷாலினி அஜித்.
வைரல் செய்திகள்
விண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்கள் கொண்டு போகும் உணவுகளின் பட்டியல்..!- வைரல் லிஸ்ட்


விண்வெளிக்குச் செல்ல உள்ள நம் இந்திய வீரர்களுக்கான உணவுகளை இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் உறுதிபடுத்தி பட்டியலிட்டுள்ளது இஸ்ரோ.
இந்தியாவின் சார்பில் முதன்முறையாக விண்வெளிக்குச் செல்ல மனிதர்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கு ககன்யான் திட்டம் எனப் பெயரிட்டு இஸ்ரோ கடந்த இரண்டு மூன்றாண்டுகளாகத் தயாராகி வருகிறது. இதற்காக நமது இந்திய வீரர்கள் ரஷ்யாவில் உள்ள விண்வெளிப் பயிற்சி மையத்தில் தயாராகி வருகின்றனர்.
நமது வீரர்கள் விண்வெளிக்குக் கொண்டு செல்ல தேவைப்படும் உணவுகள் குறித்த ஆராய்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. கடைசியாக பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் பெரிய உணவுப் பட்டியலை தயார் செய்துள்ளது விண்வெளி ஆய்வகம். இந்த உணவுகளைத் தயாரிக்கும் பணிகளைத் தற்போது மும்மரமாக இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.
இந்த உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணி, சிக்கன் குருமா, பன்னீர் குருமா, தால், சப்பாத்தி, உருளை பரோட்டா, கிச்சடி, பீன்ஸ் சாஸ் ஆகிய உணவுகள் அடங்கும். இந்த உணவுகள் அனைத்தும் இஸ்ரோ தலைமையில் மைசுரில் உள்ள உணவு ஆராய்ச்சி மையத்தில் தயார் செய்யப்பட்டு பாக்கெட் போடப்பட்டு வருகிறது.
வைரல் செய்திகள்
20 குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்… பெட்ரோல் பங்க் அசத்தல் அறிவிப்பு!


20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து குழந்தைகளுடன் திருக்குறல் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு பெற்றோர்கள் இலவச பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்களாம். 20 குறள்களைத் தாண்டியும் குறள்களை ஒப்புவித்து மாணவர்கள் ஆச்சர்யப்படுத்துவதாக அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகிறார்.
மேலும் கரூரில் உள்ள அந்த தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் தமிழ் பேசும் ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழ் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கவே இந்தத் திருக்குறள் போட்டியை அறிவித்தோம். இலவச பெட்ரோல் என்பதையும் தாண்டி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றார்.