வைரல் செய்திகள்
மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!


மதுரையில் உள்ள பிரபல பெருமாள் கோவில் யானை ஒன்று மனிதர்களைப் போல டீ வாங்கி குடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைக் கவனித்து வரும் யானை பாகன், அதை தினமும் குழிக்க சென்று திருப்பி கோவிலுக்கு கொண்டு செல்லும் முன் அதற்கு டீ வாங்கி கொடுக்கிறார்.
யானைக்கும் அந்த கடையின் டீ மிகவும் பிடிக்கும் என்று கூறுகின்றனர். மனிதர்களை போல கடையில் யானை ஒன்று டீ வாங்கி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
வைரல் செய்திகள்
கணவரை நாய் போல் சங்கிலி கட்டி வாக்கிங் சென்ற பெண்!


கனடாவில் கணவரை நாய் போல் பாவித்து, சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் நகரில் கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி வெளியில் யாரும் செல்லக்கூடாது, நடைபயிற்சி தேவைப்படுகிறவர்கள் தனியாக செல்ல வேண்டும், தேவைப்பட்டால் வளர்ப்பு பிராணிகளை கூட்டிச் செல்லலாம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் கணவரோடு வெளியே செல்ல விரும்பினார். இதற்காக ஊரடங்கு நிபந்தனைகளை ஒவ்வொன்றாக பார்த்து, செல்லப்பிராணிகளுடன் வாக்கிங் செல்லலாம் என்ற வசதியை தேர்ந்தெடுத்தார்.
ஆனால், செல்லப்பிராணி என்ற பெயரில் தன் கணவருக்கு நாய் போல கழுத்தில் கயிறு கட்டி, வீதி வீதியாக கூட்டிச் சென்றார். இதனைக் கண்ட அங்கிருந்த போலீசார் எச்சரித்தனர். ஆனால், அந்த பெண்மணியோ செல்லப்பிராணிகளை கூட்டிச் செல்லாம் என்ற நிபந்தனையின்படியே என் கணவரை கூட்டி வந்துள்ளேன் என்று வாதாடினார். அதற்கு அவரது கணவரும் நாய் போல முகபாவணையை வைத்துக் கொண்டார்.
இதில் கடுப்பான போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறியதாக இருவர் மீதும் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகைள மேற்கொண்டனர்.
வைரல் செய்திகள்
சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிர்பிழைத்த பெண்!


மேற்கு வங்காளத்தில பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கி, சண்டையிட்டு உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் லீலா ஓரான். இவர் அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த சிறுத்தை, லீலாவை நோக்கி பாய்ந்து வந்தது. இதனை சற்றும் எதிர்பாராத லீலா, சிறுத்தையின் பிடியில் சிக்கினார். சிறுத்தையை எதிர்கொள்ள கையில் எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும், துணிந்து சண்டையிட தொடங்கினார். ஒரு கட்டத்தில் சிறுத்தையே பிடிகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது.
இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மற்ற தொழிலாளர்கள், காயத்துடன் கிடந்த லீலாவை மீட்டு மருத்துமனையில் அனுப்பி வைத்தனர். அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையிடம் சிக்கிய பெண், சண்டையிட்டு உயிர்பிழைத்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
வைரல் செய்திகள்
அமித்ஷா பி.ஏ-க்கு போன் பண்ணவா? கலவரம் ஆய்டும்!’- சிக்கன் ரைஸ்க்கு அலப்பறை போட்ட தொண்டர்!


சிக்கன் ரைஸ்-க்கு காசு கேட்டதற்காக மதக் கலவரம் வரை கொண்டு சென்று ரகளை செய்துள்ளார் தன்னை பாஜக தொண்டராக அடையாளம் காட்டிக் கொண்டுள்ள நபர்.
சென்னை திருவல்லிக்கேணியில் தன்னை பாஜக தொண்டர் என்று அறிமுகம் செய்து கொண்ட நபர் ஒருவர் ரோட்டுக் கடை ஒன்றில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். 50 ரூபாய் தான் விலை எனக் கூறப்படுகிறது. ஆனால், தான் ஒரு பாஜக தொண்டர் என்பதால் காசு தர முடியாது என்று அந்த நபர் மறுத்துள்ளார். காசு கேட்டு கடைக்காரர் தகராறு செய்ய மதக்கலவரம் வரை நடக்கும் என மிரட்டியுள்ளார் அந்த நபர்.
மேலும், அமித்ஷா பி.ஏ-க்கு போன் பண்ணவா? மதக்கலவர்ம் ஆய்டும். 1,000 பேர் ரெடியா இருக்காங்க. கலவரம் ஆச்சு கடை நடத்த முடியாது என கடுமையாக மிரட்டி உள்ளார் அந்த நபர். இதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுக்க அந்த வீடியோ வைரல் ஆனதில் தற்போது போலீஸார் அந்த நபரை கைது செய்யத் தேடி வருகின்றனர். சமுக வலைதளங்களில் #சிக்கன்ரைஸ் பாஜக எனப் பலரும் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.