வீடியோ செய்திகள்
ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்
வீடியோ செய்திகள்
ஒரு மணி நேரத்தில் 2,000 ரொட்டி… டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வைரலான ‘ஸ்மார்ட் இயந்திரம்’!


மத்திய அரசு, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவளிக்க பிரத்யேக இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரொட்டிகள் வரை செய்ய முடியும் என்று தகவல். அது குறித்தான வீடியோ தற்போது வெளியாகி காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
வீடியோ இதோ:
வேளாண் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான சூழல் ஏற்படும் என்றும், அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த மத்திய அரசு தரப்பும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாதக் கணக்கில் போராடவும் தயார் என்று அரசுக்கு அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படியான சூழல் நிலவி வரும்போதும், விவசாயிகளுக்கு உணவளிக்கும் இந்த நவீன ‘அட்சய பாத்திர’ இயந்திரம் குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ செய்திகள்
விடுதியில் தூங்கியவரை தட்டி எழுப்பிய கரடி.. நடந்தது என்ன?


தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டு இருந்தவரை கரடி தட்டி எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் வனப்பகுதியை ஒட்டியிருந்த இருந்த நீச்சல் குளம் அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மேத்யூ பேட் என்பவரைக் கரடி தட்டி எழுப்பியுள்ளது.
யார் தன்னை தட்டி எழுப்புவது என்று பார்த்த போது கரடி என அறிந்து கூச்சலிட்டுக் கத்த, கரடி அங்கு இருந்து ஓடிச் சென்றுள்ளது.
இந்த சிசிடிவி காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர அது வைரலாகி வருகிறது.
உலகம்
ஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை தலைகீழாகச் சொல்லி சாதனை படைத்த பெண்!


அமெரிக்காவின் ஹாஸ்டிங் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாம் ஒன்னென். இவருக்கு இவர் வசிக்கும் பகுதியை எப்படியாவது வரலாற்றில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற ஆசை.
அதை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை தலைகீழாகச் சொல்லி உலக கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
பாம் ஒன்னென் செய்த கின்னஸ் உலக சாதனை வீடியோ உங்களுக்காக இங்கே: