தமிழ்நாடு
‘நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன்…’- Zoho சிஇஓ ஶ்ரீதர் வேம்பு


‘நேரடி அரசியலில் ஒரு நாளும் ஈடுபட மாட்டேன்’ என ஜோஹோ நிறுவனத்தில் சிஇஓ ஶ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
ஜோஹோ என்னும் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களை கிராமங்களிலும் நிறுவி இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர் ஶ்ரீதர் வேம்பு. இவருக்கு சமீபத்தில் தான் பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊடகங்களில் தொழில், வேலைவாய்ப்பைத் தாண்டி அரசியல் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார் ஶ்ரீதர் வேம்பு.
இதனால் ஐடி துறையின் சிஇஓ ஒருவர் தமிழக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற செய்திகளும் உலவத் தொடங்கின. இதை மறுக்கும் வகையில் ஶ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஶ்ரீதர் வேம்பு, “நான் ஒரு நாளும் நேரடி அரசியலில் ஈடுபடப் போவது இல்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தையாவது உலகத் தரம் வாய்ந்த பகுதியாக உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
அதற்காக மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து மக்களுடன் இணைந்து பயணிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழர் ஒரு சர்வதேச ஐடி நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கிறார் என்பதால் ஒருபுறம் கொண்டாடும் நெட்டிசன்கள் மறுபுறம் இவரது ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
பாஜக வேட்பாளர்களாக குஷ்பு, கெளதமி போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 25 முதல் 30 தொகுதிகளை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவில் போட்டியிடும் பிரமுகர்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
மதுரை தெற்கு தொகுதியில் ஏஆர் மகாலட்சுமியும், காரைக்குடி பகுதியில் பிஆர் செந்தில்நாதன், ராஜபாளையம் பகுதியில் நடிகை கெளதமிம் சேப்பாக்கம் தொகுதியில் நடிகை குஷ்புவும் மயிலாப்பூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் இவர்களுக்கு கிட்டத்தட்ட இந்த தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் பாஜக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குறித்து பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தற்போது வேட்பாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா; பாஜகவில் இணைகிறாரா?


புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் கவிழ்ந்த நிலையில் தற்போது புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தபோது நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க கூடாது என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் சிவக்கொழுந்து நிராகரித்ததை அடுத்து நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் சிவக்கொழுந்து துணை நிலை ஆளுனரிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். ராஜினாமாவை அடுத்து சிவக்கொழுந்து அவர்களும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் புதுவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாடு
நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு


அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்பி இரவீந்திரநாத் குமார் ஆகியோர் அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பில் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், சிடி ரவி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது என்பதும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பேச்சுவார்த்தையும் நிறைந்ததாகவும் தெரிகிறது.
அனேகமாக இன்று அதிமுக தலைமை பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்2 days ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!