தமிழ்நாடு
ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை – தமிழகத்தில் குறைய வாய்ப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி விலையானது அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு தான் என்றும், மீதம் இருப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகளே என்றும் சொல்லப்படுகிறது. இப்படி மத்திய – மாநில அரசுகள் போடும் வரிகளை குறைக்க முன் வர வேண்டும் என்று பல தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம், ‘இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்க எந்த வித திட்டமும் இல்லை’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் மாநில அரசு வரிக் குறைப்பு செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் முதல்வர் பழனிசாமி சந்திக்கும் போது கூட, பெட்ரோலின் விலைக் குறைப்பின் அவசியத்தை உணர்த்தினார். நாங்களும் தொடர்ந்து மத்திய அரசுக்கு இது குறித்து தெரியப்படுத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடித்துவிட்ட திமுக, அடுத்ததாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகளுடன் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 176-178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு
நெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்!


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தியை போகவே மக்களிடம் மிக நெருக்கமாக பழகி வருவதும், பொதுமக்களில் ஒருவராக சகஜமாக இருப்பதும் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
பாஜகவில் இணைந்த புதுவை அரசு கவிழ காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள்!


கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சிலர் திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுவை அரசு விழுவதற்கு காரணமாக இருந்த இரண்டு எம்எல்ஏக்கள் இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவருடைய முன்னிலையில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்
அதுமட்டுமின்றி புதுச்சேரி சபாநாயகர் சிவகொழுந்துவின் சகோதரர் ராமலிஙக்ம் என்பவரும் இன்று பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!