தமிழ்நாடு
சசிகலா ஐசியுவில் அனுமதி! மீண்டும் மூச்சு திணறல்!!


சசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பின்னர் சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சசிகலா, பெங்களூரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில், நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இயல்பு நிலைமைக்கு திரும்பினார்.
இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சாதாரண வார்டில் இருந்து அவசர சிகிச்சை பிரிவு ஐசியூவுக்கு மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு
புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா; பாஜகவில் இணைகிறாரா?


புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் கவிழ்ந்த நிலையில் தற்போது புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தபோது நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க கூடாது என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் சிவக்கொழுந்து நிராகரித்ததை அடுத்து நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் சிவக்கொழுந்து துணை நிலை ஆளுனரிடம் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். ராஜினாமாவை அடுத்து சிவக்கொழுந்து அவர்களும் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் புதுவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாடு
நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு


அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்பி இரவீந்திரநாத் குமார் ஆகியோர் அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பில் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், சிடி ரவி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது என்பதும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பேச்சுவார்த்தையும் நிறைந்ததாகவும் தெரிகிறது.
அனேகமாக இன்று அதிமுக தலைமை பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடித்துவிட்ட திமுக, அடுத்ததாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகளுடன் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 176-178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்2 days ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!