தமிழ்நாடு
ரஜினியை அரசியலுக்கு வரக்கோரிய போராட்டம்: களத்தில் ‘போதையில் ஆடும் ரசிகர்கள்’!?


நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று கோரி, அவரது ரசிகர்கள் இன்று சென்னையில் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் களத்தில் சில ரசிகர்கள், குதூகல ஆட்டம் போடுகின்றனர். அவர்கள் மது போதையில் இப்படி ஆட்டம் போடுவதாக தெரிகிறது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, உடல்நல பாதிப்பு காரணமாக அரசியல் கட்சித் தொடங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ரஜினி அறிவிப்பு வெளியிட்ட அன்றைய தினமே, சில ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள், சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியில் போராட்டம் செய்தனர். அவர்களை தமிழக காவல் துறை அப்புறப்படுத்தியது. ரஜினி இல்லத்துக்கு முன்பு போராடக் கூடாது என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்படியான சூழலில் இன்று அனுமதி வாங்கி போராட்டம் செய்து வருகின்றனர் சில ரசிகர்கள்.
போதைய போட்டுட்டு ஆடுறானுவ😂🤣 pic.twitter.com/NhVK6yYdNc
— உளவாளி (@withkaran) January 10, 2021
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி


இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்களுக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு யாரும் எந்தவித அச்சமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு
பெண் ஐபிஎஸ் பாலியல் தொல்லை விவகாரம்: விசாரணை அதிகாரி நியமனம்!


பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் தாஸ் என்பச்வர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விசாரணை அதிகாரி தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராஜேஷ் தாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின,
மேலும் பாலியல் புகார் வெளிவந்ததை அடுத்து ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பதும் சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பதும் முன்னாள் சிறப்பு டிஎஸ்பி ராஜேஷ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: 23 தொகுதிகள் கேட்பதாக தகவல்!


அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில் பாமகவுக்கு இணையாக தேமுதிகவும் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.