தமிழ்நாடு
சைக்கிளில் வந்ததற்கான விளக்கத்தை பதறிப்போய் விளக்கிய விஜய் தரப்பு!


நடிகர் விஜய் இன்று தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என்பதும் அவர் வந்தபோது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததை அடுத்து அவரை பாதுகாப்புடன் ஓட்டு போட்ட உடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் விஜய் சைக்கிளில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் ரசிகர்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டதாக தெரிகிறது. அவர் சைக்கிளில் ஏன் வந்தார் என்பதற்கு விளக்கம் அளித்து விஜய் ரசிகர்கள் பதிவு செய்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெட்ரோல் விலையை உயர்வை சுட்டிக்காட்டுவதற்கு தான் விஜய் சைக்கிளில் வந்தார் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை குறிப்பிடுவதற்காகத்தான் சைக்கிளில் வந்தார் என்றும் அவரது ரசிகர்கள் பதிவு செய்ததால் மத்திய அரசு தரப்பில் இருந்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சைக்கிளில் சென்றது ஒரு சாதாரண விஷயம் என்றால் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியது ஏன் என்ற கேள்வியை தற்போது நெட்டிசன்கள் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.
#TNElection #TNElections2021 #TNElection2021 #TNAssemblyElections2021 #tnelectionday #Election2021 #Elections2021 #Thalapathy #Vijay #thalapathyfansteam #Thalapathy @actorvijay @Jagadishbliss @BussyAnand @V4umedia_ pic.twitter.com/H6XVkAkKJm
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 6, 2021
தமிழ்நாடு
கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: சத்யபிரதா சாகு


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் அருகே மர்ம வாகனங்கள் இருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து புகார் மனுவாக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் கமல்ஹாசன் தரப்பில் இருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் வாக்கு எண்ணும் மையங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்று மாலையே கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் வெளி வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் செய்தார்களா? ஆக்சிஜன் விவகாரம் குறித்து உதயநிதி!


தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்வளவு நாட்களும் உங்களை ஆலோசித்து தான் மத்திய அரசு செய்ததா என கிண்டலுடன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து 45000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?
அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு.
தமிழ்நாடு
பாஜகவில் இணைந்த சிவாஜி கணேசன் மகனின் முக்கிய அறிக்கை!


சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நடிகர்திலகம் ஆசியுடன் இறை அருளுடன் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்தின் பரப்புரையின்போது உடனிருந்து உதவிய நல் இதயங்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21-ஆம் நாள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் அறிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்’ என்று ராம்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!