தமிழ்நாடு
அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? வரலட்சுமியின் வைரல் வீடியோ


நாளை தேர்தல் நாளில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தலில் அனைத்து தரப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாக்களிக்க வேண்டியதன் விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று தான் கேட்க வேண்டும். அதேபோல் அரசியல்வாதிகள் நமக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட நாம் அரசியல்வாதிக்கு என்ன செய்வோம் என்பதை காட்டவேண்டும். நாளை தேர்தலில் அரசியல்வாதிகளை ஓட்டு போட்டு செஞ்சுடுவோம் ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு என்று வரலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Be the change you wanna see.. one day to make a difference..#vote it's your right.. #april6th #VoteChennai pic.twitter.com/ez2wvcb0hf
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) April 5, 2021
தமிழ்நாடு
கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: சத்யபிரதா சாகு


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் அருகே மர்ம வாகனங்கள் இருப்பதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து புகார் மனுவாக தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் கமல்ஹாசன் தரப்பில் இருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்றும் வாக்கு எண்ணும் மையங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்று மாலையே கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் வெளி வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் செய்தார்களா? ஆக்சிஜன் விவகாரம் குறித்து உதயநிதி!


தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் தயாராகும் ஆக்சிஜனை தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்வளவு நாட்களும் உங்களை ஆலோசித்து தான் மத்திய அரசு செய்ததா என கிண்டலுடன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்திலிருந்து 45000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?
அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு.
தமிழ்நாடு
பாஜகவில் இணைந்த சிவாஜி கணேசன் மகனின் முக்கிய அறிக்கை!


சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நடிகர்திலகம் ஆசியுடன் இறை அருளுடன் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்தின் பரப்புரையின்போது உடனிருந்து உதவிய நல் இதயங்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21-ஆம் நாள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் அறிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்’ என்று ராம்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?
-
சினிமா செய்திகள்2 days ago
காரக்குழம்பு சாப்பிட கனியின் வீடுதேடி சென்ற சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!