தமிழ்நாடு
620 கிமீக்கு மனித சங்கிலி.. கேரளாவில் பெண்களை திரட்டி போராடும் பினராயி அரசு!


திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று லட்சக்கணக்கான பெண்கள் அம்மாநிலத்தில் 620 கிமீக்கு பெரிய மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். கேரள கம்யூனிச அரசின் முழு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது.
கேரளா அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று ஏற்கனவே அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெண்கள் அமைப்புகள் பலவற்றுடன் பினராயி விஜயன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பின் முடிவில் கேரளாவில் பெண்கள் சார்பில் பெரிய மனித சங்கிலி போன்ற மதில் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ”பெண்களின் மதில் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. இது மிகவும் அமைதியான முறையில் நடக்கும். மாலை மூன்று மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும். பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த போராட்டத்திற்கு வனிதா மதில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 620 கிமீக்கு பெண்கள் கைகளை இணைத்து சங்கிலி போல சாலை ஓரம் நிற்க போகிறார்கள். கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு தொடங்கி தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரை இந்த சங்கிலி நீள உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பெண்களை வழி நடத்துவார்கள்.
தமிழ்நாடு
பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்


பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு
மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்


மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை
மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”
இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
இன்றுடன் முடிகிறது செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையா?


12அம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்றுடன் செய்முறைத்தேர்வு முடிவடைவதால் நாளை முதல் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக 12அம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்ற அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
தமிழகத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!