Connect with us

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தயார் என சொல்லும் ஸ்டெர்லைட்; ‘ஒண்ணும் வேணாம்’ என தரவுகளை அடுக்கிய வைகோ!

Published

on

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களில் மட்டும் பலர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் சப்ளை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், இதன் காரணத்தால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு முறையாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட வேண்டும் எனக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம், ‘இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள்’ என்று மத்திய அரசைக் காட்டமாக சாடியுள்ளது. 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் காப்பர் உற்பத்தி செய்து வந்து, தற்போது நிறுவனத்தை மூடியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் செய்து தர தயார் எனக் கூறியுள்ளது. 

அதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ‘இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரது கருத்துகள், ஆங்கில செய்தித்தாளில், விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7,000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2,000 டன் ஆக்கித் தருகின்றது.

இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவுக்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது.

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ஆக்சிஜன் ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36 ஆயிரம் லிட்டர் ஆக்க முடியும்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்’ எனக் கூறியுள்ளார். 

Advertisement

தமிழ்நாடு

இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு

Published

on

By

 

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை தயார் படுத்தும் விதமாக அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவித்திருந்தது

இந்த நிலையில் இன்றும் நாளையும் 24 மணி நேரம் பேருந்து சேவையும் இருக்குமென தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இன்றும் நாளையும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது

இன்று 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கின்போது 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது, ஞாயிறு அன்று முழு அளவில் பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால் மே 10 முதல் முழு ஊரடங்கு என்பதால் மக்களுடைய தேவையை கருதி இன்றும் நாளையு முழு அளவில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றும், இதைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கோ அல்லது தேவைக்கேற்ப எந்த பயணம் வேண்டுமென்ராலும் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன்பின் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு எந்தவித அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமா? முதல்வர் முக ஸ்டாலின் பதில்!

Published

on

By

தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவைகளில் ஒன்று பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் பெண்களை அடுத்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் ‘பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் திருநங்கைகளுக்கும் இந்த திட்டத்தை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது

மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

 

 

Continue Reading

தமிழ்நாடு

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிக்கல்

Published

on

By

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உட்பட கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும், 12ஆம் வகுப்பு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற்று முடிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பதில் மட்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் விரிவான விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என பள்ளிக் கல்வி துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
தமிழ்நாடு2 mins ago

இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு19 mins ago

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமா? முதல்வர் முக ஸ்டாலின் பதில்!

தமிழ்நாடு45 mins ago

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிக்கல்

தமிழ்நாடு1 hour ago

நாளைய முழு ஊரடங்கு ரத்து: அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறக்க அனுமதி!

தமிழ்நாடு3 hours ago

இன்றும் நாளையும் எத்தனை மணி வரை கடை திறக்கலாம்?

தமிழ்நாடு3 hours ago

மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு3 hours ago

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகம் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து:

இந்தியா3 hours ago

மேற்குவங்கத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது: என்ன காரணம்?

தமிழ்நாடு5 hours ago

எதிர்க்கட்சி தலைவர் யார்? முடிவு எட்டப்படாததால் கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு5 hours ago

அரசு, தனியார் மருத்துவமனைகளின் காலி படுக்கைகளின் விபரம்: அரசு வெளியிட்ட இணையதள முகவரி

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending