தமிழ்நாடு
நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!


நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் அவர்களுடைய கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்பட்டதை அடுத்து காலவரையற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்தால் தினசரி அலுவலகம் செல்பவர்களும் வெளியூர் செல்பவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால் போக்குவரத்து ஊழியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழ்நாடு
கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவது தான் நம் முதல் வேலை: உதயநிதி ஸ்டாலின்


கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது ஆவேசமான சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்துகளையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஊழல் குறித்து அவர் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை.
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை. 2/2
— Udhay (@Udhaystalin) March 5, 2021
தமிழ்நாடு
அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய தகவல்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன,
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விருப்பமனு கொடுத்தவர்களிடம் இரு கட்சிகளும் நேர்காணலை நடத்தி உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்கத்தில் தேர்தல் களைகட்டி விட்டது என்று கூறலாம்.
தமிழ்நாடு
திமுக கூட்டணிக்கு செல்கிறதா என்.ஆர்.காங்கிரஸ்? புதுவையில் திருப்பம்!


தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிக்கு என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்களை திமுக தரப்பு அழைப்பு விடுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் இந்த கூட்டணியில் தற்போது முறிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் காரைக்கால் மாவட்ட திமுக வேட்பாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜகவை உள்ளே நுழைய விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு என்ஆர் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கிரிக்கெட்23 hours ago
பும்ராவுக்கும் இந்த தமிழ் நடிகைக்கும் திருமணமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை வீட்டில் ஐடி ரெய்டு!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG- ‘பயப்படாம விளையடுங்கப்பா!’- இங்கி., வீரர்களுக்கு ஜோ ரூட் ஓப்பன் ரிக்வஸ்ட்
-
கிரிக்கெட்1 day ago
6 பந்தில் 6 சிக்ஸர்கள்: பொளந்து கட்டிய பொல்லார்டு!