தமிழ்நாடு
இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்: கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா?


தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்களை கவரும் கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் தொடர்ச்சியாக ஒன்பது பட்ஜெட்டுக்களை அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது 10வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் கிட்டத்தட்ட தற்போது 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதை கண்டித்து திமுக உள்பட எதிர்கட்சிகள் இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ஏற்கனவே விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு
ஆளுனர் தமிழிசை எடுத்த அதிரடி நடவடிக்கை: புதுவையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையும் உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தொட்டுவிட்ட பெட்ரோல் டீசல் விலை விரைவில் தமிழகத்தில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வாட் வரி குறைப்பால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தமிழகத்திலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு போட்டியாக திருக்குறள் படிக்கும் ராகுல்காந்தி!


தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுவதற்கு தகுந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பல ஆண்டுகளாக அரசியல் செய்பவர்கள் கூட துண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு திக்கி திணறி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழே தெரியாத பிரதமர் மோடி தமிழில் திருக்குறளை எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல், பிசிறில்லாமல் பேசி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இனிவரும் நாட்களில் ராகுல் காந்தியும் தனது மேடை பேச்சுகளில் திருக்குறளை உதாரணமாக கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
Have been reading "Tirukkural”. Am stunned by its depth.
Listening
Through your ears to hear, to listen and to understand.
Is to make gold of grain and golden grain of sand.
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2021
தமிழ்நாடு
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களும் தள்ளுபடி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!


தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார்
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ஆறு சவரன் வகையிலான நகை கடன் தள்ளுபடி என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!