தமிழ்நாடு
தமிழகத்தில் 6 டிகிரி வெப்பநிலை உயரக்கூடும்; இந்த நேரத்தில் வெளியே வராதீர்கள்- அதிர்ச்சி எச்சரிக்கை!


தமிழகத்தில் வரும் நாட்களில் இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில்,
01.04.2021 முதல் 04.04.2021 வரை: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
05.04.2021: கரூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 1200 முதல் பிற்பகல் 0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
பாஜகவில் இணைந்த சிவாஜி கணேசன் மகனின் முக்கிய அறிக்கை!


சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நடிகர்திலகம் ஆசியுடன் இறை அருளுடன் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. பயணத்தின் பரப்புரையின்போது உடனிருந்து உதவிய நல் இதயங்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21-ஆம் நாள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் அறிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்’ என்று ராம்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
தினமும் 500 டன் ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம்: தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை மனு!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் மோடி நேற்று தனது உரையில் கூறி இருந்தார் என்பதையும் பார்த்தோம்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தினமும் 500 டன் ஆக்சிஜனை தயாரித்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் தேவைப்படுபவர் மட்டும் பொதுத் தேர்வு எழுதலாம் என்றும் பொதுத்தேர்வு அனைவரும் எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கூடுதல் மதிப்பெண்களுக்காக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் ஒரு செய்தி கிட்டத்தட்ட அனைத்து இணைய தளங்களிலும் வெளியானது.
-
சினிமா செய்திகள்2 days ago
எனக்கு அவரை தவிர யாருமே இல்லை: விவேக் மேனேஜரின் உருக்கமான பதிவு
-
சினிமா செய்திகள்2 days ago
தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுதாக்கல்
-
இந்தியா2 days ago
பார்வையற்ற தாய்.. ரயில் தண்டாவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்.. காப்பற்றிய ரயில்வே ஊழியர்!
-
சினிமா செய்திகள்2 days ago
ஏப்ரல் 23ல் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகிறதா எம்ஜிஆர் மகன்?