Connect with us

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

Published

on

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் நிலை என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 25 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.

மேலும் கொரோனா வைரஸ் வார்டில் வேறு எந்த ஒரு நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கக் கூடாது அளவுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.

அரசு வெளியிடும் உத்தரவுகளைத் தனியார் மருத்துவமனைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

Published

on

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில், கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதை ஆய்வு செய்த போது, பலங்காலத்தில் உயிர் வாழந்த கடல் உயிரனங்களின் படிமங்கள் மீது அமோனியம் என்ற வேதிப்பொருள் மூடியதால் ஏற்பட்ட உருண்டைகள் தான் இது என்று திருச்சி அருக்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்லார்.

முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரியை ஆழப்படுத்தும் போது பெரிய அளவிலான உருண்டைகள் கிடைத்தன. அவை டைனோசர் முட்டைகலாக இருக்கும் என்று தகவலகள் பரவின.

Continue Reading

தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

Published

on

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார்.

அண்மையில், காவிரி – வைகை குண்டாறுகளை இணைக்கும் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதற்கு நன்றி தெரிவிக்குமாறும், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மையமாக அறிவித்தற்காகவும், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பல்வேறு நலப்பணிகளுக்கு வந்து சென்றதற்காகவும் நினைவுப் பரிசாக மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமிக்கு வழங்கினார்.

மேலும் அந்த மாட்டு வண்டியை வழங்கும் முன்பு, அந்த வண்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டியும் வழியனுப்பி வைத்துள்ளார்.

இந்த மாட்டு வண்டு மற்றும் காளை மாடுகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்!

Published

on

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் கையெழுத்திடக் கோரி, ஆளுநர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்குச் சட்டமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை அடுத்து ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த அரசாணையில் கையெழுத்திட ஆளுநருக்கு அனுப்பி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இதுவரை கையெழுத்திடப்படவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விரைவில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக, ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே, நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும்.

ஆனால் அதில் கையெழுத்திட, மேலும் ஒரு மாதம் வரை காலம் எடுக்கும் என்று ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன. அப்படி தாமதமானால் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது குறைவாக இருக்கும்.

எனவே ஆளுநர் விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையில் கையெழுத்திட வலியுறுத்தி, திமுக சார்பில், ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “அரசுப் பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டுமல்ல, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பும் போது எல்லாம், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எதிர்க்கட்சிகள் என்றால் அரசியல் செய்யாமல், அவியலா செய்வார்கள்” எனப் பேசியுள்ளார்.

Continue Reading
வீடியோ50 mins ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வணிகம்2 hours ago

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் ஆதித்யா பூரி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்11 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்12 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

வீடியோ19 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ20 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2020)

தமிழ்நாடு2 days ago

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ50 mins ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ19 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ20 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

Trending

%d bloggers like this: