Connect with us

தமிழ்நாடு

‘ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை… பரிசீலிக்கும் தமிழக அரசு!

Published

on

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சில கொரோனா கட்டுப்பாடுகள் உடன் இந்த ஆண்டும் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மதுரை அவனியாபுரத்திலும் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டுகள் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்” என்றார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வழக்கமாக வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு வழக்கமாக வீட்டு உபயோகப் பொருட்கள், கார், பைக், சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, தங்கக்காசு என வழங்கப்படுவது வழக்கம். நீண்ட காலமாகவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு

பொதுத்தேர்வு ரத்தானாலும் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published

on

By

9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு சில ஊடகங்களில் 9,10,11 ஆகிய வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ’பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும்’ என்று கூறினார்

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டே பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று என்றும் அது தொடர்பான கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் அடுத்த கல்வியாண்டுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

Continue Reading

தமிழ்நாடு

ட்யூனில் பின்னிப் பெடலெடுத்த ‘மோடி சாங்’- பாஜக வெளியிட்ட வீடியோவ பாத்துட்டீங்களா?

Published

on

By

பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வந்துள்ளார். அங்கு அவர் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் வந்து, தமிழ தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘வாங்க மோடி, வணக்கங்க மோடி’ கவனம் ஈர்த்து வருகிறது.

‘மோடி பாடல்’ வீடியோ இதோ:

புதுச்சேரியில் பேசிய மோடி, ‘புதுவை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.2,426 கோடி மதிப்பிலான விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும். புதுச்சேரியில் தற்போது சாலை, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கடல் சார் வணிகங்களுக்காக பல்வேறு திட்டங்களைத் துவக்கி உள்ளோம். இதன் மூலம் மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லாத காரணத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன். புதுச்சேரிக்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவையானது. அடுத்து புதுச்சேரியில் உருவாகப் போகும் அரசு, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்’ என்று பேசினார்.

 

 

 

 

Continue Reading

தமிழ்நாடு

“9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்” ஏன்? – முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்

Published

on

By

தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் வைட்டமின் மற்றும் புத்துணர்வு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தார்கள். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதன் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும் இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 – 21 கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பீடுகள் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்து அரசு விரைவில் தகவல் வெளியிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
தினபலன்20 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (26/02/2021)

கிரிக்கெட்30 mins ago

#INDvsENG | இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா

வேலைவாய்ப்பு4 hours ago

M.SC படித்தவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

இந்தியா5 hours ago

‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!

வேலைவாய்ப்பு5 hours ago

நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்5 hours ago

400 விக்கெட்டுகள்… வரலாறு படைத்த அஷ்வின் ரவிச்சந்திரனின் சாதனை..!

வேலைவாய்ப்பு5 hours ago

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்5 hours ago

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ வீடியோ பாடல் வெளியீடு..!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு10 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ1 month ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ1 month ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி2 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending