தமிழ்நாடு
நீதிபதிகளை விமர்சித்த ‘துக்ளக்’ குருமூர்த்தி.. நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல்!


நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர் பேசியிருந்தார். அரசியல்வாதிகளால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், யார் காலையாவது, யார் மூலமாவது தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். ஊழல் செய்பவர்களை நீதிபதிகள் தண்டிப்பதில்லை. தகுதிவாய்ந்த நீதிபதிகள் வந்தால் இதுபோல் நடந்திருக்காது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் இது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கு குரூமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குருமூர்த்தி பேசியதை மனுவாக அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தொடரப்பட்டது.
தமிழ்நாடு
ட்யூனில் பின்னிப் பெடலெடுத்த ‘மோடி சாங்’- பாஜக வெளியிட்ட வீடியோவ பாத்துட்டீங்களா?


பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வந்துள்ளார். அங்கு அவர் பாஜக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து அவர் கோயம்புத்தூர் வந்து, தமிழ தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதையொட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘வாங்க மோடி, வணக்கங்க மோடி’ கவனம் ஈர்த்து வருகிறது.
‘மோடி பாடல்’ வீடியோ இதோ:
வாங்க மோடி …
வணக்கங்க மோடி …#TNWelcomesModi pic.twitter.com/D7fH4pmxzb— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 25, 2021
புதுச்சேரியில் பேசிய மோடி, ‘புதுவை மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.2,426 கோடி மதிப்பிலான விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும். புதுச்சேரியில் தற்போது சாலை, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் கடல் சார் வணிகங்களுக்காக பல்வேறு திட்டங்களைத் துவக்கி உள்ளோம். இதன் மூலம் மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இல்லாத காரணத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன். புதுச்சேரிக்கு ஒரு நல்ல அரசாங்கம் தேவையானது. அடுத்து புதுச்சேரியில் உருவாகப் போகும் அரசு, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்’ என்று பேசினார்.
தமிழ்நாடு
“9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்” ஏன்? – முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்


தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் வைட்டமின் மற்றும் புத்துணர்வு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தார்கள். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதன் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும் இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 – 21 கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பீடுகள் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்து அரசு விரைவில் தகவல் வெளியிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
ஆல்பாஸ் என்பதால் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்பதால் நாளை முதல் அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
இருப்பினும் திட்டமிட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!