Connect with us

தமிழ்நாடு

வேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்!

Published

on

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் கோவையில் தங்கியுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து கோவைக்கு உயர் எச்சரிக்கை விடப்பட்டது. அந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்ற 5 பேரும் இலங்கை தமிழர், இஸ்லாமியர்கள் என்றும் தகவல் வெளியானது.

இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க தமிழகம் முழுவதும் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன தணிக்கை, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு உள்ளிட்ட அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் தற்போது கோவையில் முகாமிட்டுள்ளதாகவும், தாங்கள் இஸ்ல்லாமியர் என்ற அடையாளத்தை காட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக நெற்றியில் திருநீறு, திலகம் இட்டு இருப்பார்கள் என உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீவிரவாதிகள், வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோயில், ஊட்டியில் உள்ள வெலிங்கடன்,சூலூர் விமானப்படை தளம், பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை உள்ளிட்ட பல முக்கிய வழிபாட்டு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து கோவை, மதுரை மீனாட்சியம்மன் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், தமிழக, கர்நாடகா எல்லை, தமிழக, கேரளா எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு

பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்

Published

on

By

பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.

ஸ்டாலின் முட்டாள் என்பது தெரியும், அதுபோல பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள் தான், தமிழ்நாடு இன்று முட்டாள் நாடாக மாறி வருகிறது என்றும் எச்.ராஜா கூறினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Continue Reading

தமிழ்நாடு

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்

Published

on

By

மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை

தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், பொதுமக்களும் திமுகவினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும்

மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”

இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Continue Reading

தமிழ்நாடு

இன்றுடன் முடிகிறது செய்முறை தேர்வு: பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையா?

Published

on

By

12அம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்றுடன் செய்முறைத்தேர்வு முடிவடைவதால் நாளை முதல் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக 12அம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்ற அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் 12அம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கிய நிலையில் அந்த தேர்வு இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து நாளை முதல் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் வர வேண்டுமா? அல்லது விடுமுறையா? என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை செய்முறைத்தேர்வு முடிவடைந்தவுடன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading
இந்தியா9 mins ago

கொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..?- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை

வேலைவாய்ப்பு32 mins ago

தேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்32 mins ago

சன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்!

வேலைவாய்ப்பு57 mins ago

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 hour ago

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 hour ago

ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!

தமிழ்நாடு2 hours ago

பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்

தமிழ்நாடு3 hours ago

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்

சினிமா செய்திகள்4 hours ago

நான் மிடில் கிளாஸ் தான், ஆனால் பிச்சைக்காரி கிடையாது: அனிதா சம்பத பதிலடி

இந்தியா4 hours ago

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending