தமிழ்நாடு
3 ஆண்டுகள் காதலில் 2 முறை கர்ப்பமானேன்: இளம்பெண்ணின் கண்ணீர்!


சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை சேர்ந்த 24 வயதான வினோத் என்பவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். மூன்று ஆண்டுகளாக காதலித்த வந்தனர் இவர்கள்.
வினோத் இளம்பெண் ஆஷாவை திருமணம் செய்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் இரண்டு முறை ஆஷா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வினோத் கூறியதால் கர்ப்பத்தையும் கலைத்தார் ஆஷா. அதன் பின்னர் வினோத் ஆஷாவுடன் பழகுவதை புறக்கணித்து வந்ததையடுத்து பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆஷா.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் இரண்டு மாதம் கழித்து திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஆஷா வீட்டினர் திருமணம் குறித்து பேச தொடர்பு கொண்டபோது வினோத் மற்றும் அவரது வீட்டினர் மறுத்துள்ளனர். இதனையடுத்து ஆஷா தனது காதலன் வினோத் வீட்டின் முன்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என தர்ணாவில் ஈடுபட்ட ஆஷாவிடம் தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை கைவிட்டார்.
தமிழ்நாடு
தேமுதிகவுக்கு 15 தொகுதிகள்? இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக அந்த கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இணையுமா? 3வது அணியில் இணையுமா? என்ற கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அதிமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் தமிழகம் முழுவதும் தொண்டர்களை வைத்திருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் தேமுதிக வெறும் 15 தொகுதிகளுக்கு அதிமுக கூட்டணியில் இணையுமா? அல்லது அதிரடி முடிவு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில் தேமுதிக இல்லை என்றாலும் தேமுதிக இல்லாமல் கூட்டணியை வழி நடத்த அதிமுக தலைவர்கள் முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாடு
கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவது தான் நம் முதல் வேலை: உதயநிதி ஸ்டாலின்


கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது ஆவேசமான சமூக கருத்துக்களையும் அரசியல் கருத்துகளையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஊழல் குறித்து அவர் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை.
மக்கள் பணத்தை சுருட்டி தம் முதலாளிகளுக்கு பங்கு வைப்பதில் எடுபுடிகள் மும்முரமாக உள்ளனர். கழக ஆட்சி அமைந்ததும் அடிமைகள் கொள்ளையடித்த மக்கள் பணத்தை மீட்டு அரசு கஜானாவில் சேர்ப்பதும் – கொள்ளையடித்தவர்களை சிறையில் தள்ளுவதுமே நம் முதல் வேலை. 2/2
— Udhay (@Udhaystalin) March 5, 2021
தமிழ்நாடு
அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? புதிய தகவல்!


தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன,
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விருப்பமனு கொடுத்தவர்களிடம் இரு கட்சிகளும் நேர்காணலை நடத்தி உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்கத்தில் தேர்தல் களைகட்டி விட்டது என்று கூறலாம்.
-
கிரிக்கெட்1 day ago
பும்ராவுக்கும் இந்த தமிழ் நடிகைக்கும் திருமணமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை வீட்டில் ஐடி ரெய்டு!
-
கிரிக்கெட்1 day ago
களை கட்டியது ஐபிஎல் 2021: தோனி, அம்பத்தி ராயுடு சென்னை வருகை!
-
கிரிக்கெட்1 day ago
6 பந்தில் 6 சிக்ஸர்கள்: பொளந்து கட்டிய பொல்லார்டு!