தமிழ்நாடு
நல்லாத்தானே போயிட்டு இருக்கு, எதுக்கு மாற்றம் வரனும்? – சிம்பு


தமிழக தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சிம்பு வாக்களித்துவிட்டு பேட்டி அளித்த போது நன்றாக தானே எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றது எதற்காக மாற்றம் வேண்டும்? என பத்திரிகையாளர்களை நோக்கி கேள்வியதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்று காலை முதல் திரை உலக பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் சிம்பு தனது வாக்கை பதிவு செய்ததாகவும், இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து, ‘எல்லோரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும், வாக்கு சதவீத சதவீதம் குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். வெயில் காரணமாக இருக்கலாம். இனிமேல் ஒருவேளை போடலாம். இருப்பினும் சீக்கிரமாக அனைவரும் சென்று ஓட்டு போடுங்கள்’ என்று கூறிய சிம்பு, மற்றபடி கண்டிப்பாக நல்ல விஷயம் நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியதாகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் செய்தியாளர் ஒருவர் ’மாற்றம் வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என கேட்டபோது ’எதுக்கு மாற்றம் வேண்டும் என்றே புரியவில்லை நன்றாக தானே போய்க்கொண்டிருக்கிறது’ என்று என்று பதில் கூறியதாகவும் அந்த வீடியோவில் உள்ளது.
ஆனால் இந்த வீடியோ பழைய வீடியோ என்றும், சிம்பு தற்போது ஒல்லியாக இருப்பதற்கும், இதில் குண்டாக இருப்பதில் இருந்தே இது தெரிகிறது என்றும், ஒருசிலர் வேண்டுமென்றே சிம்புவின் பழைய வீடியோவை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும்பாலானோர் இது பழைய வீடியோ என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர்
நல்லாத்தானே போயிட்டு இருக்கு, எதுக்கு மாற்றம் வரனும்? – சிம்பு pic.twitter.com/6HJGi2K963
— Velu (@Velu_6666) April 6, 2021
தமிழ்நாடு
குவார்ட்டர் பாட்டிலில் குட்டி பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்!


டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் குட்டி பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சமீபத்தில் டாஸ்மாக் கடையில் குவாட்டர் பாட்டில் ஒன்று வாங்கி வாங்கினார். பாதியை குடித்துவிட்டு மீதியை பிறகு குடிக்கலாம் என்று வைத்து இருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அந்த மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டில் உள்ளே ஒரு குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் சுரேஷிடம் கூறியதை அடுத்து அவர் அதிர்ச்சியில் மயக்கமடைந்து விழுந்து விட்டார். இதனை அடுத்து சுரேஷ் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
’நாளை சிம்புவின் புதிய பட அறிவிப்பா? ரசிகர்கள் குஷி!