Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு பின் ஸ்டாலின்: நடிகர் சித்தார்த் டுவிட்

Published

on

ஜெயலலிதாவுக்கு பின் ஸ்டாலின்தான் என நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் சித்தார்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் ’தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜெயலலிதாவுக்கு பிறகு நீங்கள் தான் என்றும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் ஆக்கபூர்வமான ஆட்சியை தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சித்தார்த்துக்கு பதிலளித்துள்ள ஸ்டாலின் ’சமூக நிதி உட்பட அனைத்திலும் சிறந்து விளங்கும் வகையில் ஆட்சி நடக்கும் என்றும் தமிழகம் கண்டிப்பாக இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்றும் உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சித்தார்த் மற்றும் ஸ்டாலின் டுவிட்டுக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

தமிழ்நாடு

12 மணிக்கு மூடப்பட்டது டாஸ்மாக் கடைகள்: ஒரே நேரத்தில் குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு!

Published

on

By

தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து காலை 8 மணிக்கே டாஸ்மாக் கடை முன் குடிமகன்கள் குவிந்திருந்தனர்

கடை திறந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான குடிமகன்கள் மாஸ்க் அணியவில்லை என்பதும் தனிமனித இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு தான் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக 12 மணி நெருங்க நெருங்க கடை மூடி விடுவார்கள் என்ற அச்சத்தில் குடிமகன்கள் முண்டியடித்துக்கொண்டு சரக்குகளை கையில் வாங்கி கொடு ஆட்டம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சலூன் கடைகள் உட்பட மற்ற அனைத்து கடைகளையும் மூடி விட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைப்பது எந்த வகையில் நியாயம் என மற்ற கடைக்காரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை அடியோடு ஒழித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் என்பதே அனைவரும் கருத்தாக இருக்கிறது

நாளை முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த கோப்பில் கையெழுத்திடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவினர் அதை ஆளுங்கட்சியாக இருக்கும்போது செயல்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading

தமிழ்நாடு

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

Published

on

By

என் தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை என முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்டாலினின் சகோதரருமான முக அழகிரி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சராக உள்ள ஸ்டாலினிஅ பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும் என் தம்பி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சியை தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் முக அழகிரி அவர்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்தது என்பதும் ஸ்டாலினால் தான் திமுகவில் இருந்து முக அழகிரி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் தற்போது ஸ்டாலினுக்கு அழகிரி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

Published

on

By

முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் இடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொன்ராதாகிருஷ்ணன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
தமிழ்நாடு21 mins ago

12 மணிக்கு மூடப்பட்டது டாஸ்மாக் கடைகள்: ஒரே நேரத்தில் குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு!

தினபலன்28 mins ago

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

ஒருதலை ராகம்’ பட தயாரிப்பாளர் காலமானார்: டி ராஜேந்தர் இரங்கல்

தமிழ்நாடு2 hours ago

எனது தம்பி முதலமைச்சர் ஆவது எனக்கு பெருமை: முக அழகிரி வாழ்த்து

சினிமா செய்திகள்2 hours ago

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

தமிழ்நாடு2 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

இந்தியா3 hours ago

2ஆம் வாய்ப்பாடு கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்!

வேலைவாய்ப்பு3 hours ago

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்4 hours ago

ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!

சினிமா செய்திகள்4 hours ago

கொரோனாவுக்கு பலியான நகைச்சுவை நடிகர் பாண்டு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending