Connect with us

தமிழ்நாடு

நாளை நீட் தேர்வு.. இன்று மாணவி தற்கொலை.. தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Published

on

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அச்சம் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பட்டாலியன் காவலர் எஸ்ஐ முருக சுந்தரத்தின் 19 வயது மகள் மாணவி ஜோதி துர்கா. சென்ற ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா ஒரு ஆண்டாக நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அவரது குடும்பத்தினரையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.

தற்கொலைக்கு முன்பு, கடிதம் மற்றும் ஆடியோ மூலமாக அதுபற்றி தெரிவித்து இருந்த ஜோதி துர்கா, என்னுடைய தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை. நான் நன்றாகத் தான் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்தேன்.

எனது பெற்றோர் எனக்கு முழு சுதந்திரமும் வழங்கி இருந்தனர். எனக்கு அவர்கள் கண்டிப்பாக பாஸாக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை.ஆனால், பாஸ் ஆக முடியுமா? முடியாதா? என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு

மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகமா? இலவச உதவி எண் அறிவிப்பு!

Published

on

பள்ளி மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்கள் இருந்தால், உதவி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இனிமேலும் பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களைக் குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார்.

பள்ளி மாணவர்கள் சேர்க்கை இந்த மாத இறுதி வரை நடக்கும். அதேபோல, மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

இந்த உதவி எண் மூலம், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் இந்த எண் பயன்பாட்டுக்கு வரும்.

மேலும், பள்ளிகள் திறந்தாலும் கண்டிப்பக பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்!

Published

on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர், திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று 1 மணிக்கு உயிரிழந்தார். இந்திய திரையுலகில் அவருக்கு வயது 74.

பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டுச் சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர். அவர் ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் வருடம் ஜூன் 4 அன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966-ல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். 1969-ல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாக தேசிய விருதைப் பெற்றார். 1981-ல் ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காகத் தனது 2-வது தேசிய விருதைப் பெற்றார். பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்கு படப் பாடல்களுக்காகவும் தலா ஒரு தேசிய விருதை தமிழ், கன்னடப் படப் பாடல்களுக்காகவும் பெற்றார். 2001-ல் பத்மஸ்ரீ, 2011-ல் பத்மபூஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்துச் சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார். இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்குப் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் ஒன்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Published

on

சென்னை மாதவரம் சுற்றுவட்டாரத்தில், ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

மணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்தார். அதில் மாதவரம் பால் பண்ணை அருகில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, காவலர் என்று கூறிக்கொண்டு வந்த நபர் ஒருவர் ஆண் நண்பரை விரட்டியடித்துவிட்டு தன்னை பாலியை வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்து இருந்தார். மேலும் தன் கை பையில் வைத்திருந்து 15 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சிசிடிவி காட்சி ஒன்றை ஆய்வு செய்த போது, பிச்சைமணி என்பவன் தான் இதற்குக் காரணம் என்று கண்டு பிடித்து கைது செய்தனர்.

அவனை விசாரணை செய்ததில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம், காவலர் எனக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Continue Reading
இந்தியா8 hours ago

இன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்!

தமிழ்நாடு8 hours ago

மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகமா? இலவச உதவி எண் அறிவிப்பு!

சினிமா செய்திகள்9 hours ago

மண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்15 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/09/2020)

வேலை வாய்ப்பு1 day ago

மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 day ago

தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்1 day ago

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று 1 மணிக்கு காலமானார்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/09/2020)

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: