Connect with us

தமிழ்நாடு

‘சசிகலா உயிருக்கு ஆபத்து; எவன் இதை பண்றான்..?’- வெடித்தெழுந்த சீமான்

Published

on

சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள நிலை திடீரென அவரது மோசமடைந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, இதற்குப் பின்னால் எதாவது சதி வேலைகள் நடைபெறுகிறுகின்றனவா என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. இதற்கு அச்சாரம் சேர்ப்பது போல சசிகலாவின் சகோதரரான திவாகரன் முன்னதாக, ‘அவரு உயிருக்கு சிலரால் ஆபத்து இருக்குங்க..!’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சசிகலா விவகாரத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். வரும் 27 ஆம் தேதி சசிகலா, விடுதலையாக இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘இன்னும் சில நாட்கள்ல சசிகலா அம்மையார் வெளியே வர்றதா இருக்குற நிலையில, அவங்களுக்கு எப்படி திடீர்னு உடல்நிலை மோசமாகுது. அதுவே சந்தேகத்தை எழுப்புதுல்ல. யாருக்கு கொரோனா வரும்? பொது வெளியில சுற்றித் திரிஞ்சுட்டு இருக்குறவங்களுக்கு. சசிகலாதான் சிறையில யாரையும் பார்க்காம தனியா இல்ல இருந்தாங்க. அவங்களுக்கு எப்படி கொரோனா வந்துச்சு. இது எல்லாம் சந்தேகத்தை எழுப்புமா எழுப்பாதா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார். சீமான், சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிப் பயணம் செய்ததற்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டும் விமர்சித்துள்ளார்.

 

 

 

 

 

 

Advertisement

தமிழ்நாடு

234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் – நாம் தமிழர் கட்சியின் ‘பலே’ திட்டம்!

Published

on

By

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் பல தொகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளது. 

இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி, அதனூடே வாக்குகளைப் பெற்றுச் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி, இச்சட்டமன்றத் தேர்தலிலும் வழமைபோல மக்களையும், மகத்தான தத்துவத்தையும் நம்பி, தனித்தே களமிறங்குகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்னும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சரிபாதி 117 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி வரலாற்றைப் புரட்டிப்போட காத்திருக்கிறது. எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் பாதுகாப்புப் பெரும்படை, எவ்விதத் தத்துவத் தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையான பாதையில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியற்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்குத்தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விடத் துணைநிற்க வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.

பாதையைத் தேடாதே; உருவாக்கு!’ எனும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உயரியக் கூற்றுக்கு, உயிரூட்டும் விதத்தில் உலகெங்கும் வேர்பரப்பி வாழுகிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சிக்கு மகத்தான ஆதரவினையும், வாக்குகளையும் வழங்கி, அதிகாரத்தில் ஏற்றி வைக்க வேண்டியது ஒவ்வொரு இனமானத் தமிழரின் தார்மீகக் கடமையாகிறது.

வருகிற மார்ச் 07 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை .எம்.சி.. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான  வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிடவிருக்கிறோம். அந்நிகழ்வில் பெருந்திரளெனக் கூடி, நமது வெற்றியை முரசறிவிக்க வேண்டுமென இனமானத் தமிழர்களை அழைக்கிறோம். தமிழர்களுக்கான அரசை அமைக்கப் பாடுபடும் இப்பெரும்பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம்.

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனும் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் முன்வைத்த முழக்கத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரியணையேற்ற பாடுபடுவோம்!

இவ்வாறு சீமான் கூறியுள்ளார். 

Continue Reading

தமிழ்நாடு

திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்

Published

on

By

பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறிய போது பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி ஒருசில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் மனித நேய மக்கள் கட்சி எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Continue Reading

தமிழ்நாடு

திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!

Published

on

By

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தநிலையில் சற்றுமுன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்

இதனை அடுத்து அடுத்த கட்டமாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

வைகோவின் மதிமுக கட்சிக்கு அதிகபட்சம் 5 அல்லது 7 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது.

Continue Reading
சினிமா செய்திகள்52 seconds ago

அஜித் வீட்டிலேயே ‘வலிமை’ டப்பிங் பணிகளா?

சினிமா செய்திகள்12 mins ago

’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!

சினிமா செய்திகள்21 mins ago

முடிந்தது ‘லுக் டெஸ்ட்’: மார்ச் 15ல் ஆரம்பமாகிறது ‘தளபதி 65’ படப்பிடிப்பு!

தமிழ்நாடு2 hours ago

234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் – நாம் தமிழர் கட்சியின் ‘பலே’ திட்டம்!

Us corona death toll overtakes world war 2
இந்தியா3 hours ago

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

தமிழ்நாடு3 hours ago

திமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்: ஒப்பந்தம் கையெழுத்தன பின் கூறிய மமக தலைவர்

சினிமா செய்திகள்3 hours ago

’கர்ணன்’ செகண்ட் சிங்கிள் பாடலின் டைட்டில் அறிவிப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

வெளியானது அலறவிடும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக்!

தமிழ்நாடு3 hours ago

திமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ்நாடு5 hours ago

அதிமுக விருப்பமனு தேதி திடீர் மாற்றம்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு10 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 month ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி3 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending