Connect with us

தமிழ்நாடு

வைகோவை அனுமதிக்கக் கூடாது: சசிகலா புஷ்பா வெங்கையா நாயுடுவுக்கு பரபரப்பு கடிதம்!

Published

on

தேசதுரோக வழக்கில் தண்டனை பெற்றதின் காரணமாக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்ட நிலையில் வேட்புமனு பரிசீலனையில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியானது.

இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மூலம் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. வைகோவுக்கு எதிராக துணைக்குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நான் குற்றம்சாட்டுகிறேன் நூல் வெளியிட்டு விழாவில் பேசியது தொடர்பாக வைகோ மீது ஐபிசி 124(ஏ) பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை என்பது அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யாது. ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்தான் ஒருவரை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யமுடியும். இருந்தாலும் ஜனநாயகத்தின் கோயில் போன்ற இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை அனுமதிக்கக் கூடாது.

வைகோ தொடர்ந்து நாட்டிற்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக பலமுறை முழக்கங்கள் எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். இதன்மூலம் தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறார் வைகோ. மேலும், நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் பேசிய வைகோ, என்ன தண்டனை வழங்கினாலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வேன் என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளேன். இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கும் பிரதமருக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவிப்போருக்கும் தக்க பாடம் புகட்டும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு

சட்டத்தை மீறிய உதயநிதி ஸ்டாலின்.. கைது செய்யப்படுவாரா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Published

on

திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை மீறி தூத்துக்குடி பயணம் செய்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மீது காவல் துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தைச் சந்திக்க திமுக இளைஞர்கள் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்று வந்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இன்று சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்று வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக, தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாரா என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

தமிழ்நாடு

தமிழகத்தில் தூய தமிழில் பேசினால் ரூ.5000 பரிசு!

Published

on

தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகச் செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழ் பேசுவோரிலிருந்து தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தகுதி உடையோர் www.sorkuvai.com என்ற இயணய தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாடறிந்த இரண்டு தமிழ் பற்றாளர்களிடம் தங்களது தமிழ் பற்றை உறுதி செய்து, சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வர வேண்டும் என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் துறை அகர முதல திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விண்ணப்பம்:

Continue Reading

தமிழ்நாடு

பிரியாணி வாங்கி தராத கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Published

on

மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை கண்ட வீட்டின் உரிமையாளர் பணம் கொடுத்த தங்களுக்குப் பிரியாணி வங்கி வாரும்படி கேட்டுள்ளனர்.

அதைப் பார்த்த மனோகரனின் மனைவி சவுமியா, தனக்கும் பிரியாணி வங்கி வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று மனோகரன் தட்டிக்கழித்தார் என்றும், அதனால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டும் உள்ளது.

இதில் மனம் இடைந்த சவுமியா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன், தன் கணவர் தன்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்றே தீக்குளிக்க முயனேறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

நேரில் சென்ற காவல் துறையினர், உண்மையாகவே தீக்குளிக்கக் காரணம் பிரியாணி தானா என்று சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.

Continue Reading
சினிமா செய்திகள்21 hours ago

ரூ.20-க்கு புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்.. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்23 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்23 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/07/2020)

வணிகம்2 days ago

மாருதி சுசூகி கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் புதிய திட்டம் அறிமுகம்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/07/2020)

பர்சனல் ஃபினாஸ்2 days ago

எஸ்பிஐ வங்கியின் புதிய ஏடிஎம் விதிகள், கட்டணம் பரிவத்தனை வரம்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஆட்டோமொபைல்3 days ago

சரிந்த விற்பனை; அதிர்ச்சியில் மாருதி சுசூகி!

வணிகம்3 days ago

இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 சரிவு!

தொழில்நுட்பம்3 days ago

வாட்ஸ்ஆப் லேட்டஸ்ட் அப்டேட் ’டார்க் மோட்’.. எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா10 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: