சினிமா
மோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்ஷி!


பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினின் குடும்பம் தற்போது சந்தித்திருக்கும் ஒரு பிரசானை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படுகிறது.
கவினின் அம்மா ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து இந்த பண மோசடி வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த அவரது அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் எனவும், கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக மாற்ற வேண்டாம் என முதல் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சாக்ஷியும் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்ஷி, கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவரை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கியுள்ள கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சாக்ஷி. இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சாக்ஷி.
வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
சினிமா செய்திகள்
அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன?


நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் ஒன்று அமீர் கானுடன் நடிக்க இருந்த லால் சிங் சர்தார் திரைப்படம்.
கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கி அளித்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது அது நடைபெறாமல் போனது.
அடுத்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, மீண்டும் 20 நாட்கள் கொடுத்துள்ளார். ஆனால் லடாக் எல்லையில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை எடுக்க வேண்டி இருந்தது. அங்கு இந்தியா- சீனா எல்லை பிரச்சனை வர மிண்டும் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.
பின்னல் படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டு அதற்கு 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளார், ஆனால் அதுவும் புதிய மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா காரணமாகத் தள்ளிப்போனது.
ஒரு படத்துக்கு எத்தனை முறைதான் தேதிகளை ஒதுக்குவது என்று நினைத்த விஜய் சேதுபதி, லால் சிங் சர்தார் திரைப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு


யோகிபாபுவை வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பொம்மை நாயகி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து “ரைட்டர்” படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்ஷன்ஸ்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். ‘பொம்மைநாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி, எடிட்டர் செல்வா RK, கலை ஜெயரகு, பாடல்கள் கபிலன், அறிவு ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். யாழிபிலிம்ஸ், வேலவன், லெமுவேல் இணை தயாரிப்பில், பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் பொம்மை நாயகி உருவாகிறது.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!