Connect with us

தமிழ்நாடு

சென்னையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்! மருத்துவர்கள் எச்சரிக்கை

Published

on

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்திய விமானப் படையின் உதவியால் மத்திய அரசு விரைவாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட அதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

A medical worker pushes a trolley cart containing tanks of oxygen outside the emergency department of the 12 de Octubre hospital in Madrid, Spain, on Monday, March 30, 2020. Spain, confronting one of the worlds fastest spreading outbreaks, has over the past week enacted a series of measures, ranging from a 400 million-euro aid package for the tourism and transport industries to declaring a state of emergency. Photographer: Paul Hanna/Bloomberg via Getty Images

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் மாதத்தில் பாதிப்பு ஒருவேளை உச்சத்தை எட்டினால் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதற்கு முன்பே தமிழக அரசு சுதாரித்து ஆக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து தமிழக அரசு விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆக்சிஜன் சிலிண்டரை இருப்பு வைத்துக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

தமிழ்நாடு

Lockdown: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்தது தமிழக அரசு!

Published

on

By

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

அதன்படி, ‘காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பறி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தளர்வுகள் குறித்த விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட கடைகள் செயல்படவும் தடைகள் தொடரும் எனத் தெரிகிறது.

 

Continue Reading

தமிழ்நாடு

முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

Published

on

By

தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தனது செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகிய நால்வருக்கும் தற்போது துறைகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து சற்று முன் வெளியான தகவலின்படி நால்வருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

உதயச்சந்திரன் – பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

உமாநாத் – நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

சண்முகம் – முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

அனு ஜார்ஜ் – சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

Continue Reading

தமிழ்நாடு

2021ல் சட்டசபை சபாநாயகர்; 2016ல் காவலர்களால் வெளியேற்றப்பட்டவர் – அப்பாவு குறித்த வைரல் வீடியோ!

Published

on

By

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவுவை சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு இன்று வரை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த முறை மீண்டும் திமுக சார்பில் எம்.எல்.ஏ ஆக போட்டியிட்ட அப்பாவு, அபார வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். மேலும் அவர் போட்டியின்றி சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

2016 ஆம் ஆண்டு அவர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் பிரச்சனை இருப்பதாக குற்றம் சாட்டியபோது, அங்கிருந்த காவலர்களால் அவர் தரதரவென வெளியே இழுத்து வரப்பட்டு அவமானப்படுத்தப் பட்டார்.

இன்று அதே அப்பாவு, சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் ஒப்பீடு வீடியோ ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

Continue Reading
தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்15 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (12/05/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்17 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்19 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (12/05/2021)

சினிமா செய்திகள்23 hours ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!!!

தமிழ்நாடு23 hours ago

Lockdown: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்தது தமிழக அரசு!

தமிழ்நாடு1 day ago

முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு1 day ago

2021ல் சட்டசபை சபாநாயகர்; 2016ல் காவலர்களால் வெளியேற்றப்பட்டவர் – அப்பாவு குறித்த வைரல் வீடியோ!

தமிழ்நாடு1 day ago

‘சரக்கு அடிச்சா கொரோனா பறந்துடும்..’- உளறும் குடிமகன்கள்; வைரல் வீடியோ

தமிழ்நாடு1 day ago

ட்ரோன் மூலம் கொரோனா விழிப்புணர்வு; மைலாப்பூரில் போலீஸ் புதிய முயற்சி!

தமிழ்நாடு1 day ago

ஞாயிற்றுகிழமையும் ரேசன் கடை உண்டு: தமிழக அரசு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending