தமிழ்நாடு
‘ரஜினியின் ஆதரவு எங்களுக்கே..’ இன்னமும் நம்பும் பாஜக தலைவர்!


ரஜினி நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு நாட்களாக நடைபெற்ற பாஜகவின் பொங்கல் திருவிழா கோலாகலமாக அமைந்ததாகவும், ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் கொண்டாட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக மாவட்ட தலைவருக்கு மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் தாக்கப்பட்டுள்ளதாவும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பின்வாங்கல் குறித்து பேசிய எல். முருகன், ரஜினி தேசியத்தையும், ஆன்மீகத்தையும் நேசிப்பவர். எனவே, அவரது ஆதரவு நிச்சயம் பாஜகவிற்கு இருக்கும் என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில், அவரது ஆதரவை பெறுவதற்கு மற்ற அரசியல் கட்சியினர் போட்டிபோட்டுக் கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!


அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று அமைச்சர் தங்கமணி வீட்டில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தரவில்லை என தேமுதிக அதிருப்தி அடைந்து இருப்பதால் தான் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
அதிமுக கூட்டணியில் ஒருவேளை தேமுதிக இடம் பெறவில்லை என்றால் தேமுதிகவின் அடுத்தகட்ட நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய விலை என்ன?


தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பு என்றும் எந்த விலையில் தங்கம் வாங்கினாலும் அது நமக்கு லாபத்தை கொடுக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பலர் அறிவுறுத்தினர்.
இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் 37 ஆயிரத்து 912 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை தற்போது 80 காசுகள் உயர்ந்து 73.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ 73 ஆயிரத்து 300 என்ற விலையில் விற்பனையாகி வருவதாகவும் நகைக்கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட அனுபவம்: நர்ஸ் நெகிழ்ச்சி


இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்களுக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த தடுப்பூசியை போடுவதற்கு யாரும் எந்தவித அச்சமும் பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவுறுத்தினார்.