தமிழ்நாடு
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை இடம்? அதிகாரபூர்வ அறிவிப்பு!


அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும் ஜிகே மணி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு தமிழ்நாட்டில் 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு
தமிழகத்தில் ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முழு விவரம் பின்வருமாறு:
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!
-
கிரிக்கெட்2 days ago
விக்கெட் எடுத்தவுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடிய பிராவோ! வைரல் வீடியோ