Connect with us

தமிழ்நாடு

கொரோனாவுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்

Published

on

கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கொரோனா கொடுந்தொற்று முதல் அலையைவிட தற்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு முறையாகப் போட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மாறாக தடுப்பூசிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதிலேயே மோடி கவனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்படும் இந்தச் சூழலிலும் கூட மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மாநில அரசுகள் சுயேச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட ‘பிஎம்ஜிகேபி’ இன்சூரன்ஸ் திட்டத்தையும் மோடி அரசு கடந்த மார்ச் 24 ஆம் தேதியோடு நிறுத்திவிட்டது. மோடி அரசு எந்த அளவுக்கு மக்களின் உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

கொரோனாவைக் எதிர்கொள்வதில் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் பிரதமர் மோடிக்கு இல்லை என்பதற்குக் கடந்த ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் எடுத்த ‘லாக்டவுன்’ முடிவு ஒரு சான்றாகும். மக்களின் உயிர்மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் நாட்டைக் கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும். எனவே, தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடி நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக அவர் தனது பதவியிலிருந்து விலக முன்வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Advertisement

தமிழ்நாடு

ரெம்டிசிவியர் மருந்துக்கு இனி சென்னை செல்ல வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

ரெம்டிசிவியர் மருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

எனவே தமிழகம் முழுவதில் இருந்தும் நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் வந்து சாலையில் காத்துக்கிடந்து மருந்துகளைப் பெற்றுச்சென்று வந்தனர்.

இந்நிலையில், 5 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளனர். தினமும் மாலை 4 மணி வரை இந்த 5 மாவட்ட மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் கிடைக்கும்.

மதுரை, திருச்சி, சேலம், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து கிடைக்கும்.

இத்தனை நாட்களாகச் சென்னையில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. எனவே கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்து வந்தது. அத்தியாவசிய வசதிகள் இல்லாததாலும் நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இன்று முதல் 5 மாவட்டங்களிலும் ரெம்டிசிவியர் மருந்து கிடைக்கும் என்ற அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் வெளியாகியுள்ளது.

எனவே இன்று வரவேற்பு குறைவாக இருந்தாலும், நாளை முதல் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் பெரும் அளவில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திங்கட்கிழமை முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதால், மருந்து வாங்கச் செல்பவர்கள் சொந்த வாகனங்களில் வெளியூர் சென்று ரெம்டிசிவியர் மருந்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் ரெம்டிசிவியர் மருந்து குறைந்தவிலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தமிழ்நாடு

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம்!

Published

on

By

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்றும் நாளையும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்து கொள்ளலாம் என்றும் இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்குவதற்கு வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இத்துடன் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலையும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் குடிமகன்கள் இரண்டு வாரத்துக்கு தேவையான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

தமிழ்நாடு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

Published

on

By

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது என்பதும் 12ஆம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் 10ஆம் தேதி ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வரும் திங்கட்கிழமை ஆலோசனை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் 10ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
தமிழ்நாடு7 mins ago

ரெம்டிசிவியர் மருந்துக்கு இனி சென்னை செல்ல வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு16 mins ago

குடிமகன்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக் நிர்வாகம்!

தமிழ்நாடு27 mins ago

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாடு30 mins ago

மதுப்பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. ஓர் சோகச் செய்தி..!

தமிழ்நாடு50 mins ago

இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு1 hour ago

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமா? முதல்வர் முக ஸ்டாலின் பதில்!

தமிழ்நாடு2 hours ago

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிக்கல்

தமிழ்நாடு2 hours ago

நாளைய முழு ஊரடங்கு ரத்து: அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறக்க அனுமதி!

தமிழ்நாடு3 hours ago

இன்றும் நாளையும் எத்தனை மணி வரை கடை திறக்கலாம்?

தமிழ்நாடு4 hours ago

மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending