தமிழ்நாடு
ஜெயலலிதா பிறந்தநாள்; நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாளை, அதிமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அவர், ‘ஜெயலலிதா ஜியை அவரது பிறந்தநாளன்று நினைவுகூர்கிறேன். மக்கள் நலத் திட்டங்களுக்காகவும், எளிய மக்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் அவரைப் பலரும் வியந்து பார்ப்பது உண்டு.
Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She is widely admired for her pro-people policies and efforts to empower the downtrodden. She also made noteworthy efforts to empower our Nari Shakti. I will always cherish my several interactions with her. pic.twitter.com/nyV3xz1Lb8
— Narendra Modi (@narendramodi) February 24, 2021
பெண்கள் முன்னேற்றத்துக்கும் அவர் அதிக பாடுபட்டார். நான் அவருடன் பல முறை உரையாடியதை எப்போதும் நினைவில் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.
இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைப் போலவே சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் சிலைக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு
செய்தியாளர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!- ஏதேணும் முக்கிய அறிவிப்பா?


நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 40-வது திருமண நாளை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடுகிறார். வழக்கமாக ரஜினிகாந்த் பிறந்தநாள், திருமண நாள் என விசேஷ நாட்களுக்கு ரசிகர்களுக்கு ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து வாழ்த்து தெரிவிப்பர். அதேபோல் நாளை மறுநாள் ரஜினியை சந்திக்க வழக்கம் போல் வீட்டில் கூட்டம் கூடும். ரசிகர்களை சந்திக்க வெளியே வரும் போது நிச்சயமாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
இந்த சூழலில் ரஜினியே இன்று செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். நாளை மறுநாள் தனது திருமண நாளின் போதே சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவித்துள்ளார். தனது அரசியல் முடிவு, உடல்நலம் சார்ந்த ஓய்வு, தனது திரைப்படப் பயணம் ஆகியன குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில முக்கிய முடிவுகளும் அன்றைய தினம் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு
அமமுக, தேமுதிக, மநீக கூட்டணி: சசிகலாவின் மாஸ்டர் பிளான்!


தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கி விட்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கும் நிலையில் சசிகலா அதிரடியாக ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் ஏற்படும் அதிருப்தியால் வெளியேறும் கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையலாம். இவ்வாறு நடந்தால் கண்டிப்பாக 20 சதவீத வாக்குகளை இந்த கூட்டணி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
‘வீரத்தமிழச்சியை சந்திக்க வந்தேன்’: சசிகலாவை சந்தித்தப் பின் இயக்குநர் பாரதிராஜா பன்ச்


சசிகலாவை இன்று நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சசிகலாவின் நெருங்கிய தோழியுமான ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளில் பாரதிராஜா, சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தமிழக அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் சந்திப்புக்குப் பின்னர் பாரதிராஜா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
நான் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதனைத் தமிழச்சியைப் பார்க்க வந்தேன். ஒரு சாதனைப் பெண் சசிகலா. அவர் ஒரு வீரத் தமிழச்சி.
இப்ப தான சசிகலா வந்திருக்காங்க. பொறுத்திருந்து அவரது நடவடிக்கையைப் பாருங்கள். தமிழக அரசியல் வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார். இவ்வாறு அதிரடியாக பேசியுள்ளார்.
பாரதிராஜாவைப் போன்றே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இன்று சசிகலாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘பன்னீர்செல்வம் தற்போது வருத்தத்தில் இருக்கிறார். தவறான அரசியல் முடிவை எடுத்து அவர் வேதனையில் இருக்கிறார். அவர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் ஆதரவு கொடுப்போம்’ என்று ஓபிஎஸ்-ஸுக்கும் தூது விட்டுள்ளார்.
-
சினிமா செய்திகள்2 days ago
’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?
-
கிரிக்கெட்2 days ago
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருக்கலாம்? ஏன்?
-
தினபலன்2 days ago
உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (23/02/2021)
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் வேலைவாய்ப்பு!