தமிழ்நாடு
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை: ஆளுநர் காலம் தாமதிக்க கூடாது!


கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில் தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் மீண்டும் இவர்களின் விடுதலை குறித்த பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவை நேற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து விவாதித்தது. இதனையடுத்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
ரூ.4 கோடி மதிப்புள்ள செல்லாத ரூ.1000 நோட்டு பறிமுதல்: சிவகெங்கையில் பரபரப்பு!


கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது 1,000 ரூபாய் நோட்டுகள் ரூபாய் 4.5 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து ரூ.4.5 கோடி அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சிவகெங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


இந்திய தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்டுவந்த சுனில் அரோரா அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுசில் சந்திரா என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றுடன் தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக யார் நியமன செய்யப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் சுசில் சந்திரா அவர்கள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி!


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தீவிரமாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்ட போதிலும் சக்கர நாற்காலியில் இருந்து அவர் பிரசாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு19 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
விமர்சனம்2 days ago
அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!