தமிழ்நாடு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கமலஹாசன் கட்சியில் பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா இணைந்துள்ளார்.
பழ கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து இருப்பதாகவும் வரும் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியத்துவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மேலும் சில கட்சிகளும் கமல் கட்சியின் கூட்டணியுடன் இணைய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்


நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது
அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ் உள்பட பலரும் விவேக் மரணத்தையும் தடுப்பூசியையும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
மேலும் ஒருவேளை ஊசி போட்டதால் கூடுதலாக வந்து இருக்கலாமே தவிர தடுப்பூசியே காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு
வேலூர் பட்டாசு கடையில் பயங்கர விபத்து: 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி


தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரில் பட்டாசு கடை உரிமையாளர் ஒருவர் என்பதும், அவரது இரண்டு பேரக்குழந்தைகள் என்பதும் மூவரும் பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீயினால் உடல் கருகி உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம், விரைவில் வழக்குப்பதிவு: ஆணையர் பிரகாஷ்


மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா என்ற நோயே இல்லை என்றும் தடுப்பூசி என்பது மக்களுக்கு தேவை இல்லாதது என்றும் தடுப்பூசி என்ற பெயரிலும் கொரோனா என்ற பெயரிலும் மக்களை பயமுறுத்துகிறார்கள் என்றும் தடுப்பூசி போடுவதால் கூடுதலாக நோய் வருமே தவிர எந்த நோயும் குணமாகாது என்று ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!
-
சினிமா செய்திகள்1 day ago
விவேக் மறைவு குறித்து அரசியல் பிரபலங்களின் இரங்கல்கள்!
-
விமர்சனம்2 days ago
ஜோஜி – விமர்சனம்!