தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? தமிழக சுகாதாரத்துறை விளக்கம்


தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை ஆனால் அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக சுகாதாரத்துறை நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அதில் ஏற்கனவே விதித்த தளர்வுகளை நீக்குவது மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இரவு நேர ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றே தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய் விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியது
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு இருப்பதாகவும் 40 வயதானவர்களும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி சென்று விட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பது தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வு மாணவர்களும் ஆல்பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அறிவுரையை அடுத்து தற்போது அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்துக்கு இன்று பதிலளித்த தமிழக அரசு அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் வரும் மே மாதம் முதல் அரியர் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை அடுத்து அரியர் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு
கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!


ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்றைய கொடியேற்ற விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடியேற்று விழாவிற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் போர்க்கொடி தூக்கியதால் மீனாட்சி அம்மன் கோயில் அருகே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகிகள் கொரோனா பரவலை காரணம் காட்டி பக்தர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!