தமிழ்நாடு
கரையைக் கடந்த நிவர்.. தமிழக வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!


வங்கக் கடலில் காற்றழுத்தமாகத் தொடங்கி புயலாக உருவெடுத்த நிவர், இப்போது கரையை வலுவிழந்து கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தாலும் தற்போது தமிழகப் பகுதியில் தான் புயல் உள்ளது. காலை 6:30 நிலவரத்தின் படி வந்தவாசி பகுதியில் வலுவிழந்த புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்னும் 24 மணின் நேரத்திற்குத் தொடர்ந்து மழை பெய்யும். தமிழகப் பகுதியில் உள்ள நிவர் புயல் அடுத்தாக கர்நாடகம் செல்லும் அப்போது அங்கும் கனமழை பெய்யும்.
நேற்று அதிதீவிர புயலாக உருவாகி இருந்த நிவர், புதுச்சேரி அருகே நள்ளிரவு 11:30 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2:30 மணியளவில் வலுவிழந்து கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்பட்டது.
அடுத்த 6 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகரும் புயல் முழுமையாக வழுவை இழக்கும்.
தமிழகத்தில் 1.30 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் நிலப்பகுதிக்கு வந்ததுதான் வலுவிழந்ததுக்கான காரணம்.
புயலால் கீழ் விழுந்த மரம் மற்றும் மின்கம்பங்களை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன.
சென்ம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த 9 ஆயிரம் கண கடி நீர், தற்போது 5 ஆயிரம் அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
சசிகலா முதல் ஜெயலலிதா வரை… பரபர சூழலில் அதிமுக மா.செ கூட்டம்… என்ன பேசப்பட்டது?


சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை மறைவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது அணி உருவாவதற்கும் இந்த முறை தேர்தலில் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இப்படியான சூழலில் நேற்று எந்த வித சலனமுமின்றி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
நேற்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுகவின் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கூட்டத்துக்குத் தலைமை வகித்தனர்.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்த சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 27 ஆம் தேதி அவர் விடுதலையாகி வெளியே வரும் போது அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதையொட்டி, சசிகலாவின் விடுதலையையொட்டி கட்சியில் எந்த வித சச்சரவுகளும் இருக்கக் கூடாது என்பது நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.
அதேபோல வரும் 27 ஆம் தேதி, சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, திறக்கப்பட உள்ளது. இந்த நினைவிட திறப்பானது மிக பிரம்மாண்டமாக நடத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகள் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக இளைஞரணி தலைவர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற முழக்கத்தை எழுப்பி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதலில் கருணாநிதியின் வீட்டில் பரப்புரையத் தொடங்கிய அவர், திருச்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அங்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சட்டமன்ற துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனும் உள்ளார் என்றும் இதை பகிரங்கமாக சொல்லுகிறேன், முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்றும் சவால் விட்டிருந்தார்.
இதனையடுத்து சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. அதில் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் உதயநிதி ஸ்டாலின் தனக்கு வழங்க வேண்டும் என்றும் இனி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை யாரும் தொடர்புப்படுத்தக்கூடாது என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைசபாயகர் ஜெயராமனைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு, உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு
‘சசிகலா நல்லா இருக்கணுங்க..!’- அதிமுக கே.பி.முனுசாமி உருக்கம்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சசிகலா பற்றி கே.பி.முனுசாமி, ‘அதிமுகவினர் மனிதாபிமானம் படைத்தவர்கள். எதிரிகள் கூட தனிப்பட்ட முறையில் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அந்த வகையில் சசிகலா அம்மையார் சீக்கிரமே பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அவர் சேவை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
-
வேலைவாய்ப்பு1 day ago
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
தமிழ்நாடு1 day ago
தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?
-
வேலைவாய்ப்பு2 days ago
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு24 hours ago
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!