Connect with us

தமிழ்நாடு

ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கீழ், கைவிரல் ரேகை உள்ளிட்டு ரேஷன் பொருட்களை வழங்க முடியவில்லை என்றால், மற்ற வழி முறைகளைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கைவிரல் ரேகை பயன்படுத்தி ரேஷ்ன் பொருட்கள் விநியோகிக்கும் முறையை நாடு முழுவதும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆனால் கைவிரல் ரேகை பல இடங்களில் ஒழுங்காக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வைகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்குச் சுற்று அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கீழ், கைவிரல் ரேகை உள்ளிட்டு ரேஷன் பொருட்களை வழங்க முடியவில்லை என்றால், மாற்று வழிகளான 1) ஆதார் மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பும் முறை, 2) ஆதார் கார்டு ஸ்கான் செய்து பதிவேற்றும் முறை, 3) ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பும் முறை, 4) மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கான் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைவிரல் ரேகை செயல்படவில்லை என்ற காரணத்திற்காக யார்க்கும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்காமல் இருந்துவிடக் கூடாது. மாற்றும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி கட்டாயம் அரிசி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்!

Published

on

தென்காசி கடைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஐ.கே நகைக் கடையில் வாங்கிய விவசாயி ஒருவர் அது போலியான 916 நகைகள் என்று ஏமார்ந்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.

விவசாயியான ராமர் கடைய நல்லூரில் உள்ள ஏ.ஐ.கே நகை கடையில், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி 20 கிராம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார். அன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் 916 தங்க நகை 2,927 ரூபாய் என மொத்த 20 கிராமுக்கு 58,627 ரூபாய் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைய நல்லூரில் உள்ள அடகுக் கடை ஒன்றில், அவசர தேவைக்காகத் தங்கச் சங்கிலியை விற்கச் சென்றுள்ளார்.

அதை வாங்கி உரசிய போது, அது குறைந்த காரட் கொண்ட போலியான தங்கள் நகை என்று தெரியவந்துள்ளது. மேலும் அதை உடை குறைவாகவும் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த விவசாயி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, கடைய நல்லூர் நகை வியாபாரிகள் சங்கத்திடம் அழைத்துச் சென்று முறையிட்டுள்ளனர்.

நகை வியாபாரிகள் சங்கம், அது போலி நகை தான் என்று உறுதி செய்த பிறகு, ஏ.ஐ.கே நகை கடையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இது தவறாக நடைபெற்றுள்ளது. நாங்கள் அதற்கு இழப்பீடாக இன்றைய விலை பணம் அல்லது நகை, மற்றும் இந்த தங்க சங்கிலியை அளித்துவிடுகிறோம் மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனால் தரம் குறைவான நகைக்கு ஹால்மார்க் முத்திரை மற்றும் பிஐஎஸ் அங்கிகாரம் எப்படி வழங்கப்பட்டது. இது மிகப் பெரிய மோசடி. எனவே நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டது நகை வியாபாரிகள் சங்கம்.

மேலும் அந்த சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நகை வாங்கியவர்களையும், அது அசல் 196 தங்கம் தானா என்று உறுதி செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Continue Reading

தமிழ்நாடு

தமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்!

Published

on

#MOU 12.10.2020 அன்று கையெழுத்தானது என்று முதல்வர் ஈபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார், 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் அரசு சார்பாகச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு  இருந்தது. இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானிய பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உட்பட 14 தொழில்  நிறுவனங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.10,005 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் துவங்கி வைத்தர்.
இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்போலோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய உள்ளது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன.
இந்த 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading

இந்தியா

அடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி?

Published

on

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதி செய்யும் படியாக குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே குஷ்பு பாஜவில் இணைய உள்ளார் என்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதை மறுத்த நடிகை குஷ்பு தனக்கு பாஜகவில் இணையும் எண்ணம் ஏதும் இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் தாக்கியது குறித்தும், பேரிடர் காலங்களில் மோடி விமானத்தில் பறந்து சென்று பார்வையிட்டுவிட்டு சென்று விடுவார். அதை படம்பிடிக்க ஒரு புகைப்பட கலைஞரையும் கூடவே அழைத்து செல்வார். ஆனால் ராகுல் காந்தி அப்படி இல்லை. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் அளவுக்கு எளிமையானவர்.

இப்படியெல்லாம் குஷ்பு கடந்த வாரம் வரை பேசி வந்த நிலையில், எப்படி திடீரென பாஜவில் இணைய உள்ளார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை உறுதி செய்யும் வண்ணமாகக் காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் செலுத்தும் சிலர், அடிமட்டத்தில் தொடர்ந்து கட்சிக்காகப் பாடு படும் எங்களைப் போன்றவர்களை கண்டுகொள்வதில்லை. அது மிகுந்த வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகினாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தனக்குள்ள மரியாதை ஒரு போதும் குறையாது என்று சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

முதன் முதலில் திமுகாவில் தன்னை இணைத்துக்கொண்ட குஷ்பு, பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். இப்போது அடுத்த கட்சியாக பாஜகவுக்கு தாவ முயற்சித்து வருகிறார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இன்று பாஜகவில் தமிழகத்தை சேர்ந்த 3 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிற்பகல் 1 மணியளவில் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளார். அதன் பின் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்9 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2020)

ஆரோக்கியம்14 hours ago

தாய்ப்பால், விலங்கின்பால் மற்றும் செயற்கைப் பால் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்தியா17 hours ago

விவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!

ஆரோக்கியம்17 hours ago

தினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

இந்தியா18 hours ago

நவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா?

வேலை வாய்ப்பு19 hours ago

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு19 hours ago

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு20 hours ago

ஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்20 hours ago

ஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: